Sunday, October 23, 2011
Friday, October 21, 2011
பரவுகிறது கூடங்குளம் போராட்டம்
ஜினியர் விகடன் 22/10/11 இதழிலிருந்து
கூடங்குளம் போராட்டம் உச்சக்கட்டமாக வெடித்துள்ள நிலையில்... அதன் தொடர்ச்சியாக கல்பாக்கத்திலும் போராட்டம் வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. மருத்துவர் புகழேந்தியின் தலைமையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து, கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் செயல்படும் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை நோட்டீஸாக அச்சடித்து அந்த நிர்வாகத்துக்கும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் வழங்கி இருந்தனர். அவர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு, கல்பாக்கம் அணு சக்தித் துறையினர் பதில் அளிக்கும் விதமாக, கடந்த 15.10.2011 அன்று அனைத்துத் தமிழ் நாளிதழ்களிலும் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தனர்.
'அந்த பதில்கள் அனைத்தும் தவறானவை... ஒன்றுக்கு ஒன்று முரணானவை’ என்று சொல்லும் புகழேந்தி, அது குறித்து சில தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இரண்டாவதாக, 'கல்பாக்கம் பகுதி நிலநடுக்கப் பகுதி 3-ல் உள்ளது என்று இந்தியப் புவியியல் துறையால் வரையறுக்கப்பட்டு உள்ளது’ என்கிறார்கள். இந்திய அணு சக்திக் கழகத்தால் செப்டம்பர் 28, 2011-ல் வெளியிட்ட விழிப்பு உணர்வு அறிக்கை பக்கம் 8-ல் உள்ள வரைபடத்தில், கல்பாக்கம் நிலநடுக்கப் பகுதி (ஆபத்துக் குறைவான) 2-ல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த முரண்பாடு? அதே போல இந்திய அணு சக்தித் துறை, ஜெய்தாபூர் அணு மின் நிலையம் நிலநடுக்கப் பகுதி 3-ல் இருப்பதாகச் சொல்லியது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், அது ஆபத்தான நிலநடுக்கப் பகுதி (ஆபத்தான) 4-ல் இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் அணு மின் நிர்வாகத்தார்? நான்காவதாக, 'பி.எஃப்.பி.ஆர். எனும் அதிவேக ஈணுலையில் உருவாகும் திரவக் கழிவுகளின் அளவுகள் மிக மிகஅதிக மாகக் கூறப்பட்டுஉள்ளது’ என்கிறது அணு மின் நிலைய நிர்வாகம். இதுவும் தவறானதே. முதலில் திரவக் கழிவுகள் கடலில் கலக்கவில்லை என்றும் அதனால் மீன் வளம் அழியாது என்றும் கூறிய நிர்வாகம், தற்போது திரவக் கழிவுகளின் அளவு மிகைப்படுத்திக் கூறப்பட்டதாகச் சொல்கிறது. அதிவேக ஈணுலையில் இருந்து, 'முதலாம் வகைக் கழிவுகள் ஒரு நாளைக்கு 94,000 லிட்டர் வரையிலும் கடலில் விடப்படும்’ என்று நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை (பக்கம் 5-21) கூறியது. இது பொய்யா? ஐந்தாவதாக, அணு மின் நிலையங்கள் கல்பாக்கத்தில் துவங்குவதற்கு முன்னரே, கடற்கரை மணலில் ஆல்ஃபா மற்றும் புளூட்டோனியத்தின் அளவை அளந்ததாகக் கூறுகிறார்கள். இதுவும் தவறு. சுனாமிக்குப் பின் கதிர்வீச்சு அளவில் மாற்றம் இல்லை என்று கூறும் நிர்வாகம், அந்த அளவை ஏன் வெளியிடவில்லை? கடற்கரை மணலில் உள்ள ஆல்ஃபா மற்றும் புளூட்டோனியத்தின் அளவை மாவட்ட ஆட்சியர், பத்திரிகையாளர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் முன் அளந்து காட்ட நிர்வாகம் தயாரா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஐயம் தீர்க்கும் வண்ணம் விடை அளிப்பதே நியாயம். நிர்வாகம் அதைச் செய்யுமா?'' என்று கேட்கிறார் புகழேந்தி. பொதுமக்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.! - ந.வினோத்குமார் |
Saturday, October 1, 2011
junior vikadan அணு ஆட்டம்!
அணு ஆட்டம்!
'வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்! விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!’ - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒரு சிலர், 'இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு வேலை முடியும் தறுவாயில் மூடச்சொல்வது நியாயமா?’ எனக் கேட்கின்றனர். உண்மை என்ன தெரியுமா? 1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டு விழாவைக் கடுமையாக எதிர்த்து, பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகையைத் தடுத்தது முதல், இன்று வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 1989-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரியிலே துப்பாக்கிசூடு முதல் 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 நாள் சாகும் வரை உண்ணாவிரதம் வரை எண்ணற்ற பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், தெருமுனைப் பிரசாரங்கள் என எறும்புக் கூட்டம் போன்று இயங்கிக்கொண்டே இருந்தோம். எங்களை வெறும் துரும்பு என நினைத்த அரசுகள் ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்பட்டு எதேச்சதிகாரமாக, தான்தோன்றித்தனமாக கூடங்குளம் திட்டத்தை எங்கள் மேல் திணித்தனர். ஒரு கருத்துக் கேட்பு கூட்டம்கூட நடத்தவில்லை. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். அப்போது தவறவிட்டு, இப்போது எங்கள் தவறு இது என்று சொல்வது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. ''ஐயகோ, வளரும் நாடாம்... மின்சாரம் வேண்டுமாம்! யார் வளர்கிறார்கள்? டாடாக்களும், பிர்லாக்களும், அம்பானிகளும், மிட்டல்களும்! அவர்களின் வளர்ச்சிக்காக, தமிழக மீனவனும் விவசாயியும் தம் தொழிலை இழக்க வேண்டுமா? தமிழ் மண்ணை விஷமாக்கி, தமிழ்க் கடலை நாசமாக்கி, நமது உணவுப் பாதுகாப்பைப் புதைத்து அழித்து, நமது சந்ததிகளின் எதிர்காலத்தைச் சுட்டுப் பொசுக்கி, தமிழர் வாழ்வைக் காவு கொடுக்க வேண்டுமா? இது என்ன வளர்ச்சி? இது நமக்கு வேண்டுமா? 60 கோடி இந்தியர்கள், வெறும் 20 ரூபாயோடு ஒரு நாளைக் கழிக்கிறார்கள். 40 கோடி இந்தியர்கள் ரயில் பாதைகளிலும், சாலையோரங்களிலும் காலைக்கடன்களை முடிக்கிறார்கள். தெரு நாய்களுக்கு அணு சக்தித் துறையையும், அசுர பலம் கொண்ட ராணுவத்தையும் இரு கண்களாகக் கொண்டு இயங்கப்போகும் இந்தியா, அம்மாவாக இருக்க மாட்டாள், அரக்கியாக மாறிவிடுவாள். தன் ஈனப் பசிக்கு இரையாக தான் ஈன்றெடுத்த மக்களையே ரத்தம் சொட்டச் சொட்டக் கடித்து விழுங்கி, கபளீகரம் செய்வாள். விழித்துக்கொண்ட மலையாளிகளும், வங்காளி களும் அவர்கள் மண்ணில் அணு மின் நிலையமும் வேண்டாம், அணு குண்டுத் தொழிற்சாலைகளும் வேண்டாம் என உறுதிபடச் சொல்கின்றனர். தடுக்கின்றனர். ஆனால் தமிழன்? வாய்ச் சொல் வீரர்களையும், கடிதம் எழுதுபவர்களையும், சினிமா நடிகர்களையும் நம்பிக்கொண்டு நடுத் தெருவில் நிற்கிறான்! மத நிறுவனங்கள், சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சாதாரண மக்களுக்காக சாதாரண மக்களால் நடத்தப்படும் சாதாரண மக்களின் சாதாரண அகிம்சைப் போராட்டமாக கூடங்குளம் போராட்டம் உருவெடுத்து இருக்கிறது. சாதாரண இந்தியர்களின், தமிழர்களின் உயிட்களுக்கும் விலை இருக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு இருக்கிறது, அவர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதுதான் போராட் டத்தின் அடிப்படை அனுமானம். 'கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்பதுதான் போராட்டத்தின் யுத்த தந்திரம். வள்ளுவர்தான் எங்கள் வழிகாட்டி. காந்தி எனும் சாந்தமூர்த்தி எங்கள் தளபதி. பெண்கள்தான் எங்கள் தலைவர்கள். பிள்ளைகள்தான் எங்கள் தூண்டுதல்கள். அணு உலைகள் அற்ற, அணு ஆயுதங்கள் அற்ற, அணுக் கழிவு எனும் அணு விஷம் அற்ற அமைதியான பாதுகாப்பான தமிழகமே எங்கள் இலக்கு. அதுவரை அணு ஆட்டம் தொடரும். புரட்சிக் கவிஞர் சொல்வது போல, 'நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு - தமிழா நாம் தமிழர் நம் திறத்துக் கெவர் ஈடு? தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு - நாம் தீர்த்துக்கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு!’ போராட்டம் தொடர்கிறது... |
Subscribe to:
Posts (Atom)



