orkut தமிழ் சமுகத்திலிருந்து
தமிழர்கள் வரலாறும் அவர்கள் பண்பாட்டையும் முழுதாக கோடிட்டுப்பதியுங்கள், தமிழனின் பழமையான வரலாற்று செய்திகளில் வைணவம் இருக்காது. அதுவே இட்டுகட்டி வந்ததுதான். இயற்கை வழிபாடு, நடுக்கல் வழிபாடு இருந்துள்ளது. தமிழ் கடவுள் முருகன் விநாயகருக்கு தம்பியானதும் அவர்கள் மாங்காய்க்கு சண்டைப்போட்டதும், முருகனுக்கு வள்ளி இரண்டாம் மனைவியானதும் எல்லாம் பின்னிணைப்பாகும். இந்துஎன்பது ஒரு மதம் என நிறுவனப்படுத்தமுடியாத வாழ்க்கைமுறை, அது மிகவும் பழமையானதும் பல்வேறு காலக்கட்டத்தில் இருந்தவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபாடும்,இணைப்புகளும்,புதிய புதிய கதைகளும் இணைக்கப்பட்டது. இப்படி வந்தவைகளின் வரிசைதான் தமிழ் பக்தி இலக்கியங்கள், சைவம்,வைணவம்,சமணம்,பவுத்தம் என்று மாறி மாறி வந்திருக்கிறது. முகமதியர் படையெடுப்புகள் இந்த தனிதனியாக இயங்கி வந்த பல்வேறு மதக்குழுக்களை தன்னுடைய ஆட்சி அதிகாரத்திற்கு தக்கபடி மதம் மாற்றம் உள்ளிட்ட பலவகை மாற்றம் செய்தனர். வெள்ளையர்கள் இந்தியாவில் கால்வைக்கும் வரை பல்வேறு வகையான கதைகள், புனைவுகள் எல்லாம் தனிதனியாக இயங்கிக்கொண்டும் முகலாயர்களின் ஆட்சி அடக்குமுறையையும் தாண்டி வந்தது வெள்ளையர்கள் காலத்தில் கிடைத்த போக்குவரத்து வசதிகள் மற்று தகவல் தொடர்பு வசதிகள் இந்துமத உணர்வுகளை மேம்படுத்தியது அதோடு வெள்ளையர் எதிர்ப்பு என்ற உணர்வு சுதந்திர உணர்வு என்ற அடிப்படையில் அடிப்படையை விட இந்துமதத்தப்பாதுகாப்பு என்ற அளவில் தான் வலுப்பெற்றது. தமிழனின் பழைய வரலாறில் தாலி அணிகின்ற திருமண முறை இல்லை. சாதி இல்லை,இயற்கை வழிப்பாடுதான் இருந்திருக்கிறது
இன்றைக்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறுவகையான இந்து கடவுள் வழிபாடு முறை இருக்கிறது. ஆனால் இந்துமதத்தின் அடையாளமே இராமனும் இராமாயணமும், மகாபாரதமும் தான் என்று ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். இந்துமதத்திற்கு என்று ஒரு கடவுள், ஒரு வழிப்பாட்டு முறை இல்லை. ஆனால் அந்த உண்மையை தன்னுடைய மத வெறியின் காரணமாக, தன்னுடைய கவுரவ பிரச்சனையாக எண்ணி சிலர் வீணான கதைகளை உருவாக்கி வருகிறார்கள். பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு குழுக்களின் ஆதிக்கத்தைப்பொறுத்து மாறி மாறி வழிபாடு வந்திருக்கிறது.
யார் இந்துக்கள் என்று சட்டம் யாரை குறிப்பிடுகிறது என்று பார்த்தால் தமிழர்கள் பற்றிய, இந்துமதம் பற்றிய தெளிவு வரும். மேலும் இராமனை இதுமாதத்தின் அடையாளமாக உருவகப்படுத்துகிற கும்பலின் ம்முகத்திரையும் கிழியும். தமிழ் மக்கள் மட்டும்மல்ல உலகம் முழுமைக்கும் அந்தந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அவரவர் சூழலுக்கு ஏற்ப எதோ ஒருவகையில் இறைவழிப்பாடு செய்து வந்திருக்கிறார்கள். கால ஓட்டத்தில் குழுக்களின் அமைப்புமுறையும் அதன் தொடர்ச்சியான சமுக அமைப்பு முறையும் கடவுள் வழிப்பாட்டுமுறையை வளர்த்துவந்திருக்கிறது. குழுக்களின் வலிமையைப்பொறுத்து அதன் வழிப்பாட்டுமுறையும் ஆதிக்கம் பெற்றுள்ளது . அதைத்தொடர்ந்து இறைவழிப்பாட்டுத்தலைமை மாறி மனித வலிமை மேலோங்கி வந்திருக்கிறது. பௌத்தம் போன்றவை பல நாடுகளுக்கு பரவினாலும் அது பொதுவான சமன்பாடுகள் இருந்ததால் அது வலிமைப்பெறமுடியவில்லை(இலங்கை விதிவிலக்கு ). பிற்கால மதங்களான கிருஷ்துவமும்,இஸ்லாமும் வளர்கிற காலம் தான் மதம் பெரியளவில் பரவுகின்ற வலிமைபெற்றதுள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கும் இந்துமதத்துக்கும் இடையே இருக்கிற தொடர்பு என்பது நெடுநாளைய தொடர்பு ஆனால் இடையில் நுழைக்கப்பட்ட பிழைப்புவாதங்கள் இந்து மதம் சார்ந்த உண்மையை மறைத்து ஒரு கடவுளை அடையாளப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இங்கேயும் மதம் சார்ந்து வேறு வேறு பெயர்களில் வருகிற இந்துமத, தமிழ் இனக்காவலர்கள் யாரும் சாதி போன்றவற்றை பேசவோ விவாதிக்கவோ விரும்பாமல் யார்மீதாவது பழிப்போட்டு செல்லுகிற நிலை உள்ளது
No comments:
Post a Comment