Wednesday, October 6, 2010

அயோத்தி

http://www.vinavu.com/2010/09/30/ayodhya-injustice/


பாபர் மசூதி ராம ஜென்ம பூமி அயோத்தி  தீர்ப்பு
இந்து மதவெறி பாஸிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி
”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாதுஎன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.
“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.
ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.
”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.
ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.
நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.
அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?
எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.
அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல(TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.
பின்குறிப்பு  – 1:
அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம்  வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது  சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?
பின்குறிப்பு  – 2:
பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா ?


‘‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை.  அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.”
- பா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.
தங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன்.  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம்.  பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை.  மறுப்பவர்கள் தேசத் துரோகிகள்.  பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.
70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம்.  ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.
இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா, ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.
வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.  திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும்.  ஆரிய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை.  பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது.  அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது.  கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.
அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன.  அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது.  இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன? கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன.  இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.
தனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன்.  காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே.  தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர்.  இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்; போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்; மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான்.  இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான்.  மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.
இன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது.  எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது.  மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.
ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.
அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;  இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும்.  பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல;  மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.  பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார்.  தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும்.  பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.  இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது.  பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள்.  ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
மனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.  தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார்கள்.  வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.
தமது அடிமைத்தனத்தையே உணராத ரோமாபுரி அடிமைகளை அணி திரட்டிப் போராடச் செய்த ஸ்பார்ட்டகஸ், அடிமைகளின் ஏக்கத்தைப் போக்கப் பாடுபட்ட ஏசு கிறிஸ்து, அரேபிய நாடோடி இன மக்களை நெறிப்படுத்திய முகமது நபி, பார்ப்பனியத்தின் கொடூரச் சடங்குகளை ஒழிக்கவும், ஒரு சகோதரத்துவச் சமூகத்தைத் தோற்றுவிக்கவும் கனவு கண்ட புத்தர், இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்காகப் போராடிய கரிபால்டி, இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தின் தந்தையெனப் போற்றப்படும் இராபர்ட் ஓவன், முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை வழங்கிய பிரெஞ்சுப் புரட்சித் தலைவர்கள், அமெரிக்க விடுதலைக்குக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், நிறவெறியை ஏதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் கண்ட ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாகும் வரை எதிர்த்துப் போராடிய சே குவேரா, மதவாதிகளின் பிடியிலிருந்து துருக்கியை விடுவித்த கமால்பாஷா, வெள்ளை நிறவெறியை எதிர்த்து தன் இளமையைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, காலனிய எதிர்ப்பில் இந்திய இளைஞர்களிடம் புது இரத்தம் பாய்ச்சிய பகத்சிங், கீழத்தஞ்சையின் கூலி விவசாயிகளைப் போராட அணிதிரட்டிய சீனிவாசராவ் மற்றும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அந்தந்த நாட்டு, மத, இன மக்கள் கொண்டாடுகிறார்கள்.
மனிதகுலம் எதிர்காலத்தில் பொதுவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு வழிகண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரை அன்போடு மார்க்சியப் பேராசான்கள் என்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடுகின்றனர்.  இப்படி வரலாறு நெடுகிலும் இன, தேசிய, மத, ஜனநாயக, புரட்சிகரத் தலைவர்களை மனிதகுலம் உருவாக்கியிருக்கிறது.
இனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது? முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல.  ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன? தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான்.  இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான்.  போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம்.  ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?
ஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல.  இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்


 “அது ராமர் பிறந்த இடம்னு நீதிபதி சர்மா மட்டும்தான் சொல்லியிருக்காரு. மத்தவங்க இந்துக்களின் நம்பிக்கைன்னுதான் சொல்லியிருக்காங்க”ன்னு ஒரு பயங்கரமான மேட்டரை புடிச்சிட்ட மாதிரி ஒருத்தர் விவாதம் பண்ணிகிட்டிருக்காரு. வினவு கட்டுரை பதிவேற்றம் பண்ணின நேரம் என்னான்னு பாத்தீங்களா? நேத்து ராத்திரி தீர்ப்பு என்ன சொல்லுதுன்னு என்.டி.டி.வி யில பர்கா தத்தும், டைம்ஸ் நௌ வில அர்னாப் அம்பியும் ஆராய்ச்சி பண்ணிகிட்டிருந்த நேரத்துல எழுதின பதிவு அது. அதான் தீர்ப்பின் சாரம்னு போட்ருக்காங்கள்ல விடு..  பிறந்த இடம்னு சொன்னா என்ன, நம்பிக்கைன்னு சொன்னா என்ன ரிசல்டு ஒண்ணுதானே. பிறந்த இடம்னு சர்மா சொன்னதாவது பரவாயில்லை. அவரு கோசலைக்கு பிரசவம் பார்க்கும்போது கூட இருந்திருப்பாருன்னு ஒத்துக்கலாம். அங்கதான் பொறந்ததா இந்துக்கள் நம்பறாங்கன்னு சொல்லி, அந்த இடத்த பட்டா போட்டு கொடுத்திருக்கிறானே, அதுக்கு என்னாப்பா சொல்ற?
“இந்து” “நம்பிக்கை” ரெண்டு வார்த்தையுமே ஃபிராடு. இந்த லட்சணத்துல அந்த மசூதியில மினாரெட் இல்லயாம். மற்றவர்கள் வழிபாட்டுத் தலத்தை இடிச்சு கட்டினா அது இசுலாத்துக்கு விரோதமாம். அதுனால இசுலாமிய முறைப்படி மசூதி இல்லையாம்.
“இந்து” வுக்கு அந்த முறையெல்லாம் கிடையாதாம். அம்பிகளுக்கு ஆகம விதி தெரியுமா? 12 வருசம் ஒரு கோவிலுக்கு கும்பாபிசேகம் பண்ணலன்னா, அந்தக் கோயில் சிலையில கடவுள் கிடையாது. செத்துப்போயிட்டாருங்குது ஆகம விதி. அப்படின்னா ராமன் செத்துப்போன இடம்னுதான் அதை சொல்லணும். அத வுடு. இந்தியா முழுவதும் 12 வருசமா கும்பாபிசேகம் நடக்காத கோயிலையெல்லாம் இடிச்சு கக்கூசு கட்டிடலாமா? தயாரா? கடவுள் செத்துப்போன கோயில்ல பார்ப்பான் மணியடிச்சு வசூல் பண்றது நியாயமா?
இன்னொருத்தன் வழிபாட்டுத்தலத்தை இடித்து அங்கே மசூதி கட்றது இசுலாமுக்கு விரோதம்னு சட்டம் பேசுறாரு சர்மா. பரவாயில்லயே. அது யோக்கியமான மதமா இருக்கே. புத்த விகாரையையும், சமணப் பள்ளியையும் இடிச்சு கட்டினதுதானே பல தென்னாட்டு கோயில்கள்? நாகப்பட்டினம் புத்தவிகாரையிலிருந்து புத்தரின் தங்கச் சிலையை திருடி உருக்கித்தான் சீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செஞ்சேன்னு திருமங்கையாழ்வார் எழுதி வச்சிருக்காரே, அந்த திருட்டு சொத்த என்ன செய்யலாம்? ஹிந்துக்களுக்கு அது தோஷம் இல்லையா?
மசூதின்னா அதுக்கு மினாரெட் இருக்கணுமாம். ஆனா விநாயகருக்கு அதெல்லாம் தேவையில்ல. பிள்ளையார்னா அத சாக்கடை மேல வக்கலாம். இடம் பிடிக்கணும்னா கக்கூசுக்குள்ளயும் வக்கலாம். குப்பை மேட்டிலயும் வக்கலாம். நாலு பொறுக்கிப் பசங்க மரத்தடில மங்காத்தா ஆடணும்னா அங்க ஒரு கல்லை நட்டு, குங்குமத்த பூசி அதையும் பட்டா போட்டுக்கலாம். ஏன்னா, ஹிந்துக்களை பொருத்தவரை பரம்பொருள் எங்கும் இருக்கிறார்னு சொல்றார் நீதிபதி. வெக்கமாயில்ல. தூ.
சரி. சாணியக்கூட கடவுள்னு ஒத்துக்குற அளவுக்கு இலக்கணம் வகுத்த பரந்த நம்பிக்கை கொண்டது இந்து மதம். விட்டுத்தள்ளு. இந்துவுக்கு என்ன இலக்கணம். இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்லுது அம்பிகளுக்கு தெரியுமா? யார் இசுலாமியன் இல்லையோ, கிறித்தவன் இல்லையோ, பார்சி இல்லையோ அவனெல்லாம் இந்து. இதுதான் விளக்கம்.
இந்த விளக்கத்தையே சிவில் வழக்குக்கு மொழிபெயர்த்தா எப்படி வரும்? எதுடா உன் வீடுன்னு கேட்டா கோவிந்தசாமி வீடு, எது குப்புசாமி வீடு, சிவசாமி வீடு தவிர மிச்சமெல்லாம் என் வீடுதான்னு பதில் வரும். அதான் இப்ப வந்திருக்கிற தீர்ப்பு. மத்தவனெல்லாம் பட்டாவைக் காட்டணும். இவுக மட்டும் நம்பிக்கை, பரம்பொருள்னு அடிச்சு விடுவாங்க.
“வெள்ளைக்காரன் மட்டும் இல்லைன்னா நாமள்ளாம் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காபாலிகம்னு ஒத்தருக்கொத்தர் அடிச்சுண்டு செத்திருப்போம். ஹிந்து மதம்னு ஒண்ணை உற்பத்தி பண்ணி நம்ம எல்லோரையும் ஒண்ணா சேத்தவன் வெள்ளைக்காரன்தான்” அப்டீன்னு காஞ்சி மகா பெரியவா எழுதி வச்சிருக்காள். அம்பிகளுக்குத் தெரியுமோ?
அயோத்தி ஒரு புனித ஸ்தலம்னு எந்த இந்துவும் எந்த காலத்திலயும் தீர்த்தயாத்திரை போனதில்லை. அது இந்தியா முழுவதும் புகழ் பெற்ற புனித ஸ்தலமானது 1980 களில்தான். அதுக்கு முன்னால ராமர் எப்படி இருப்பார்னு கேட்டா என்டி ராமராவ் மாதிரி இருப்பார்னு தான் மக்களிடமிருந்து பதில் வரும். ராமராவைப் பார்த்து மூஞ்சியில ராமர் கலரை பூசிக்கிட்டு, கூட ஒரு அனுமாரையும் கூட்டிகிட்டு, ஆர்மோனியப் பெட்டியோட சென்னை வீதிகளில் இன்னைக்கும் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிறார்கள் தெலுங்கு தேசத்து ஏழைகள். அப்புறம் அதே வேசத்தை வச்சி ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார் என்டி ராமாராவ். 1980 களில் தூர்தர்சனில் ராமாயணம் போட்டு பிரபலமாக்கியதற்கு அப்புறமாதான், இந்த ராமனை வச்சி நாடு பூரா பிச்சை எடுக்கலாமே ங்கிற ஐடியா அத்வானிக்கு வந்தது. இதான் ராமஜன்ம்பூமியின் கதை. 1949 இல சிலைய அங்கே திருட்டுத்தனமா வச்சி கலவரத்தை உண்டுபண்ணப் பாத்தும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால முடியல. அப்புறம் பசுவதைத் தடுப்பு, உள்ளூர் கலவரம், ஏகாத்மத யாத்ரான்னு என்னென்னமோ பண்ணிப்பாத்து முடியாம கடைசியில கிளிக் ஆன ஐடியாதான் ராம ஜன்ம பூமி. மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமா வச்ச சிலைக்கு வழிபாடு நடத்த திறந்து விட்டா உ.பியில இந்து ஓட்டை கவர் பண்ணிடலாம்னு நம்பி கதவைத்திறந்தாரு ராஜீவ் காந்தி. ஆனா அவர் நம்பிக்கைய அத்வானி பிக்பாக்கெட் அடிச்சிட்டாரு. இதான் கதை.
ஒரு பக்கம் நம்பிக்கைன்னு பேசுறது. இன்னொரு பக்கம் மசூதிக்கு அடியில கோயில் இடிபாடு இருந்தது, “ஆர்க்கியலாஜிகல் சர்வேயே சொல்லியிருக்காள்”னு அவுத்து விடறது. கோயில் இடிபாடு மட்டுமா இருந்த்து, பாரதிய ஜனதா ஆட்சியில நடத்திய அந்த ஆய்வுல எலும்பெல்லாம் கூடத்தான் கெடச்சது. அப்போ கோயில்ல உக்காந்து கறி தின்னது யாரு? அயோத்தி பல நூற்றாண்டுகள் தொன்மையான நகரம். ஏற்கெனவே அது பவுத்த மையம். இசுலாமியர்கள் ரொம்ப லேட்டா வந்தவங்க. அங்க வந்து மசூதி கட்ட ஆப்கானிஸ்தானிலேர்ந்தா நெலம் கொண்டு வர முடியும்? இந்தியாவுல வெள்ளைக்காரன் கட்டியிருக்குற கட்டிடங்களை தோண்டிப்பாத்தா எங்கயுமே அடியில கோயில் இருக்காதா? இல்ல இந்துக் கோயிலையெல்லாம் தோண்டிப்பாத்தா அடியில பவுத்த சமண விகாரைகள் இருக்காதா? அவ்வளவு ஏன், நீங்க நங்கநல்லூர், மடிப்பாக்கத்துல கட்டி கணபதி ஹோம்மஃ பண்ணி கிரகப் பிரவேசம் நடத்தின வீடுகளெல்லாம் கை படாத கன்னி நிலத்துல கட்டினதா? “சூத்ராள் சுடுகாடு இருந்த இடம்தான், இருந்தாலும் இந்தக் காலத்துல இதெல்லாம் பார்க்க முடியுமோ, சீப்பா கிடைக்கும்போது விடமுடியுமோ? பரிகாரம் பண்ணிட்டா போச்சு”ன்னு பூமிபூஜை போட்டு கட்டின வீட்ட இப்போ தோண்டிப்பாத்தா அடியில சுடுகாடு இருக்காதா? ஒரு முனீஸ்வரன் கோயில், ஒண்டிக் கருப்பணசாமி கோயில்கூட இருக்கதா? தோண்டிப் பார்க்கலாமா, தயாரா?
மத்தவனெல்லாம் கோயிலை இடிச்சு மசூதியோ, சர்ச்சோ கட்டினான். பார்ப்பன மதம் கடவுளய திருடின மதமாச்சே. சமண தீர்த்தங்கர்ருக்கு மூஞ்சியை மறச்சி நாமத்த போட்டு, கோயிந்தா கோயிந்தான்னு கதய முடிக்கலயா? ஒரே ஒரு நாள் வெங்கடாசலபதி டிரஸ்ஸைக் கழட்டி தண்ணி ஊத்திக் கழுவி ஒரிஜினல் உருவத்த காட்டச்சொல்லுங்க. அது சிரவண பெலகொலா விலேர்ந்து சுட்டுகிட்டு வந்தமாதிரி தெரியிதா இல்லயா பார்ப்போம்

No comments:

Post a Comment