free counters

Wednesday, October 6, 2010

மாவோயிஸ்டுகள்

http://www.vinavu.com/2010/10/06/devils-advocate-arundathi-roy/





சி.என்.என்-ஐ.பி.என், டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்:
கரண் தபார்: மாவோயிஸ்டுகள் பற்றிய தங்களது பார்வை மற்றும் அவர்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது பற்றிய தங்களது கருத்துகளுடன் விவாதிக்க விரும்புகிறேன்.  அதற்கு முன், சமீபத்தில் பீகாரில் நான்கு போலீசார் கடத்தப்பட்டு எட்டு நாட்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டது, அவர்களில் ஒருவரான லூக்காஸ் டிட்டி கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அருந்ததி ராய்: தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்த ஒருவரைக் கொலை செய்வதில் புரட்சிகரமானது ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஆந்திரத்தில் போலி மோதலில் ஆசாத்தைக் கொலை செய்த போலீசாரின் செயலை ஒத்ததே இச்செயல் என நான் இதுபற்றி அறிவித்திருக்கிறேன்.  ஆனால், நமது தொலைக்காட்சிகளில் வரும் வன்முறை அடிப்படையிலான பகுப்பாய்வுகளில் இருந்தெல்லாம் நான் ஒதுங்கியே இருக்கிறேன்.  ஏனென்றால், இவ்வாறான விவாதங்கள், எதற்காக இந்தப் போர்? இந்த போரை விரும்புகிறவர்கள் யார்? இந்த போர் யாருக்குத் தேவையாக இருக்கிறது? என்ற விரிந்த பார்வையை (big picture) நீங்கள் இழந்து நிற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இருக்கின்றன.
தபார்: அந்த விரிந்த பார்வை பற்றி விவாதிக்கப் பெரிதும் விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னால் நான் வேறு சிலவற்றைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.  மாவோயிஸ்டுகள் கடந்த ஓராண்டில் பிரான்சிஸ் இண்டுவார், சஞ்சய் கோஷ் ஆகியோரது தலையைக் கொய்திருக்கிறார்கள், லூக்காஸ் டிட்டியைக் கொன்றிருக்கிறார்கள், பிற போலீசாரைக் கடத்தியிருக்கிறார்கள்; நிலைகுலைய வைக்கும் தாக்குதல்கள் தண்டிவாடாவில் நடத்தப்பட்டிருக்கின்றன; கியானேஸவரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்டு இருக்கிறது.  இவை எல்லாம் அவர்களது நியாயமான போர்த்தந்திர அல்லது செயல்தந்திர நடவடிக்கைகளா? அல்லது அவர்களது லட்சியத்தில் இருந்தான பிரழ்வுகளா? நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அ.ராய்: எல்லாவற்றையும் மொத்தமாகக் கட்டிச் சுமத்தாதீர்கள்.. உதாரணத்துக்கு அந்த ரயில் விபத்து.  அதை யார் செய்தார்கள் என்று இன்று வரை யாருக்காவது தெரியுமா?
தபார்: மாவோயிஸ்டுகள்தான் என்று எல்லோருமே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்..
அ.ராய் : எல்லோருரையும் ஏற்கச் செய்திருக்க முடியும்.  ஆனால், ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது, மெய்ப்பிக்கப் புறச்சான்றுகள் வேண்டும்.  நாளும் வெளிப்படும் உண்மைகள் சிக்கவிழ்த்த வண்ணம் இருக்கின்றன.
தபார் : சரி, தண்டிவாடா, தலை கொய்தல்கள், ஆள்கடத்தல்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அ.ராய் : தற்போது நிகழ்வது என்ன.. ஒரு சண்டை, நிலவுவது ஒரு போர்ச் சூழல்.  நீங்கள் எல்லோரும் அதில் ஒரு தரப்பால் நிகழ்த்தப்பட்ட பயங்கரமான வன்செயல்களை முன்வைத்துப் பாயிரம் பாடுகிறீர்கள்.  அதே சமயம் மறுபுறம் என்ன நடக்கிறது என்ற சித்திரத்தை ஓரங்கட்டி விடுகிறீர்கள்.  அது, ஆகப் பரிதாபகரமான அந்த கிராமங்களை இரண்டு லட்சம் துணை ராணுவத் துருப்புகள் சூழ்ந்துகொண்டிருப்பதும், மக்களை இடம் பெயர்த்து எரிவதும், எரித்துக் கொல்வதும் பற்றியது.  எல்லா வன்முறைகளும் பயங்கரமானவைதான்.  ஆனால், உண்மையில் நடப்பது என்ன என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிய விரும்பினால் அதுபற்றி நாம் சற்று விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது.
தபார் : ஆக, நீங்கள் சொல்ல வருவது, வன்முறை திருகுச்சுருள் போல விரிந்து செல்கிறது, அதில் ஒரு தரப்பின் செயல் மற்றதன் எதிர்வினையை நியாயப்படுத்தி விடுகிறது; ஒரு விதத்தில், நீங்கள் இதில் எந்த ஒரு தரப்பின் மீதும் குற்றம் காண விரும்பவில்லை.  இரு தரப்பினரையுமே சமதையான குற்றவாளிகளாகக் காண்கிறீர்கள், அப்படித்தானே?
அ.ராய் : இல்லை, அவ்வாறு இல்லை. இரு தரப்பினரையுமே சமதையான குற்றவாளிகளாக நான் பார்க்கவில்லை, இதில் எதையும் நியாயப்படுத்தவும் நான் விரும்பவில்லை.  ஒரு அரசு தனது ஆதிவாசி மக்கள் தொடர்பாகத் தான் வைத்திருக்கும் அரசியலமைவுச் சட்டத்தின் சரத்துகள் ஒவ்வொன்றையும் உடைத்தெறியும் போது, பல பத்து லட்சம் மக்களின் தாய்மண்ணில் ஒரு படுகொலையை நிகழ்த்தும்போது, அதைத் தடுக்கும் சக்தியும் இருக்கத்தான் செய்கிறது, அது இச்செயலைத் தடுக்கத்தான் செய்கிறது.  அந்த சூழ்நிலை தற்போது மூர்க்கமானதாகவும், மோசமானதாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது.  இந்த சூழலில் இருந்து நெறிசார் விளக்கம் பெற விழைவீர்களானால் விஞ்சுவது குழப்பமாகத்தான் இருக்கும்.
தபார் : ஆனால், இந்த அரசுதான் முதல்நிலைக் குற்றவாளி எனக் காண்கிறீர்கள் என்பது உங்கள் கூற்றில் இருந்து தெள்ளத் தெளிவாகத் துலங்குகிறது. அதாவது, பெரும் தவறு, முதல் தவறு அரசாங்கத்தினுடையது, மாவோயிஸ்டுகள் எதிர்வினை மட்டுமே ஆற்றுகிறார்கள் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்.
அ.ராய் : நிச்சயமாக இந்த அரசை வலுச்சண்டைக்காரனாகவே நான் பார்க்கிறேன். மாவோயிஸ்டுகளைப் பொருத்தவரை அவர்களது கொள்கையும் இந்திய அரசை பலாத்காரத்தால் தூக்கியெறியும் கொள்கைதான்.  இருப்பினும், இந்திய அரசு ஒரு நீதிவழுவா அரசு என நான் நினைக்கவில்லை. அது அவ்வாறு இருக்குமானால், சாமானிய மக்கள் இங்கு தாங்களும் நியாயம் பெறமுடியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கையேனும் பெற்றிருப்பார்களானால், மாவோயிஸ்டுகள் மக்கள் ஆதரவற்ற போர்க்குணம் கொண்ட மிகச் சிறிய குழுவாகவே இருந்திருப்பார்கள்.
தபார் : ஆக, நியாயமானது என்று நீங்கள் நம்பத் தயாரில்லாத இந்த அரசின் தன்மையின் காரணமாகத்தான் மாவோயிஸ்டுகள் தங்களது பலத்தையும், ஆதரவையும் பெற்றார்கள்…
அ.ராய் : மாவோயிஸ்டுகளை விடுங்கள், ஆயுதம் தாங்கிய, தாங்காத அனைத்து எதிர்ப்பு இயக்கங்களும், இன்றைய மாவோயிஸ்டுகளும் கூட அரசியல் அமைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரிப் போராடுகிறார்கள். ஆனால், அரசோ அதற்குக் குழிபறிக்கிறது.
தபார் : எனவே, உண்மையான சட்டவாதிகள் மாவோயிஸ்டுகள், சட்டத்தை உடைப்பவர்கள் இந்த அரசாங்கம்.. அப்படித்தானே?
அ.ராய் : மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லா எதிர்ப்பு இயக்கங்களும்தான்.
தபார் : இவ்வாரச் செய்திகள் முழுவதிலும் அடிபட்டவர்கள் என்பதால், தற்போதைக்கு மாவோயிஸ்டுகள் மீது கவனத்தை செலுத்துவோம். தேசத்தின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளைப் பார்க்கிறார் பிரதமர்.  அவர்களைப் பற்றிய உங்களது கருத்து முற்றிலும் மாறுபட்டது எனக் கருதுகிறேன். மாவோயிஸ்டுகளைப் பற்றிய உங்களது பார்வைதான் என்ன?
அ.ராய் : நாடு, நகரம், காடுகளில் உள்ள எதிர்ப்பு இயக்கங்களின் அலைவரிசையில் மிகவும் போர்க்குணம் மிக்க முனையில் முதல் நிலை வக்கிக்கும் குழுவினராக அவர்களைப் பார்க்கிறேன்.
தபார் : ஆனால் அவர்கள் என்ன செய்ய விழைகிறார்கள்?  அவர்கள் தரப்பு நியாயம் என்ன?
அ. ராய்: அவர்களது இறுதி இலக்கு, அவர்களே தெளிவாகச் சொல்வது போல, இந்த இந்திய அரசைத் தூக்கியெறிந்துவிட்டு பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தைக் கொணர்வதுதான்.  அது அவர்களது இறுதி இலக்கு.  ஆனால்,…
தபார் : சொல்லுங்கள் அருந்த்திராய் அவர்களே, நீங்கள் அந்த இலக்கை ஆதரிக்கிறீர்களா?
அ. ராய்: நான் அந்த இலக்கை ஆதரிக்கவில்லை.  என்ன அர்த்தத்தில் என்றால், உலகம் இன்று சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு கம்யூனிச அல்லது முதலாளியக் கற்பனைகளில் இருந்து பிறக்கும் என நான் நம்பவில்லை…
தபார் : அது எனக்குப் புரிகிறது.  ஆனால், இந்த அரசைத் தூக்கியெறியும் முயற்சி எதையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
அ. ராய்: சரிதான், ஆம், ஆதரிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது.  பிறகு இங்கிருந்தே விலங்கிட்டு அழைத்துச்செல்லப்படுவேனே.
தபார் : இந்தக் நடைமுறை சிக்கலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், நீங்கள் ஆதரிப்பதாகத்தான் தெரிகிறது.
அ. ராய்: இருப்பினும், இந்திய அரசு மக்கள் மீதான தனது பொறுப்புணர்ச்சியைக் கைகழுவிவிட்டது என்று நான் நம்புகிறேன்.  இந்திய அரசியலமைப்புக்கு சட்டப்படியோ, தார்மீக ரீதியாகவோ இந்த அரசு கட்டுப்படாதபோது, ஒன்று, நாம் இந்த அரசியல் அமைப்புச்சட்ட முன்னுரையின் மேற்கோள் வாசகத்தை மாற்றி எழுதலாம். அது சொல்கிறது…
தபார் : அல்லது ?
அ.ராய் : நாம் ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு என்று அது சொல்கிறது.  அதை மாற்றி இது ஒரு கார்ப்பரேட் முதலாளிகள், இந்துத்துவ சக்திகளை சுற்றிச் சுழலும் துணைக்கோள் என்று அழைக்கலாம்.
தபார் : அல்லது  ?
அ.ராய்: அல்லது இந்த அரசியலமைப்பை மதித்து நடக்கும்படியான ஒரு அரசை நாம் பெற்றாகவேண்டும். அல்லது, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும்.
தபார் : உடைத்துச் சொல்கிறேன்… இந்த அரசைத் தூக்கியெறியும் மாவோயிஸ்டுகளின் உறுதிப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.  அதைச் சொல்வதற்கு சாதுர்யமான, பூடகமான வழிகளைக் கையாள்கிறீர்கள்.  சிறைப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள்..  பார்வையாளர்களுக்குத் தங்களது பேச்சின் பொருள் இதுபோலத்தான் ஒலிக்கிறது.
அ.ராய் : இந்த அரசைத் தூக்கியெறியும் மாவோயிஸ்டுகளின் விருப்பத்தை ஆதரிக்கிறேன் என்று நான் சொன்னால், நான் என்னை ஒரு மாவோயிஸ்டு என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.  ஆனால் நான் ஒரு மாவோயிஸ்ட் அல்ல.
தபார் : ஆனால் நீங்கள் அவர்களது அனுதாபி… இல்லையா?
அ.ராய் : எல்லா இயக்கங்களுக்கும்தான் நான் அனுதாபி.  நான் இருப்பது கோட்டின் இந்தப்பக்கம்; உள் நாட்டில் மட்டுமல்ல, உலகலிலேயே கொடும் ஏழையான மக்களின் மீதே தனது இராணுவத்தைப் ஏவத்துடிக்கும் அரசுதான் இங்கு இருக்கும் அரசு என்று இடித்துரைக்கும் மக்களின் பக்கம் நான் இருக்கிறேன்.  இச் செயலை நான் ஆதரிக்க முடியாது.
தபார் : சரி, இப்படிக் கேட்கிறேன்.  நீங்கள் மாவோயிஸ்ட் இலட்சியத்தின்பால் அனுதாபம் காட்டுகிறீர்கள்.  ஆனால், அவர்கள் நடைமுறைப்படுத்தும் செயல்தந்திரம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?  பிரச்சினை என்னவென்றால், மாவோயிஸ்டுகள் மக்களைக் கருத்தொருமிக்கச் செய்தோ, சட்டபூர்வமான தேர்தலில் வென்றோ அல்லாமல் ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையைச் சாதித்து ஒரு புதிய ஜனநாயக சமூக ஒழுங்கமைவைக் கட்டமைக்க விரும்புகிறார்கள்.  பலருக்கும் இச்செயல் ஒரு உள்நாட்டுப் போரை ஒத்த விசயம்.  இதில் நீங்கள் அவர்களுடன் கைகோர்த்துச் செல்கிறீர்களா?
அ.ராய் : ஏற்கனவே இங்கு ஒரு உள்நாட்டுப் போர்தானே நடக்கிறது. வன்முறையில் மட்டுமே நம்பிக்கை கொண்ட ஒரு எதிர்ப்பு இயக்கம் புதிய ஜனநாயகத்துக்கு வழிநடத்தும் என்று நான் நம்பவில்லை.  உறுதியாக நான் நம்பவில்லை.  அதுபோலவே, நீ அகிம்சாவாதியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று கோட்பாடு பேசுவீராயின் அதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.  இவ்வாறு பேசுவது நடப்பில் உள்ள அநீதியை ஆதரிக்கும் புரட்டுப் பேச்சு என்றே நம்புகிறேன்.  எதிர்ப்பு இயக்க அலைவரிசையில் ஒன்றாக அதுவும் இடம்பெறுகிறது என்றே கருதுகிறேன்.  800 மத்திய சேமக்காவல் படையினரால் உங்கள் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு, வண்புணர்ச்சி, தீயிடுதல், சூரையாடுதல் நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டிருக்கும்போது, நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று உங்களால் சொல்லமுடியாது என்றும் நம்புகிறேன்.  அச்செயல்களை எதிர்க்கும் மக்களின் உரிமையை நான் ஆதரிக்கிறேன்.
தபார் : இருக்கட்டும், என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.   நீங்கள் அதை ஆயுதந்தாங்கிய விடுதலைப் போர் என்றோ வேறு எதுவாகவோ அழைத்துக்கொள்ளுங்கள், அதற்கான உங்கள் நியாயவாதம் எதுவாயினும் இங்கு ஒரு பொருட்டல்ல; மாவோயிஸ்டுகளின் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு உரிமையை நீங்கள் ஆதரிப்பீர்களானால்..
அ.ராய் : இப்படி மாவோயிஸ்டுகளை நோக்கியே  சுற்றியே பேச்சை கொண்டு செல்கிறீர்கள், இது நியாயம் இல்லை…
தபார் : நீங்கள் அதை ஆதரிப்பீர்களானால், அது எந்த அடிப்படையில் என்பது இங்கு விசயமல்ல,  அதே சமயம் அரசு ஆயுதம் எடுத்துத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை உங்களால் எப்படி மறுக்க முடியும்?
அ.ராய் : அரசுக்கு தன்னைத் பாதுகாத்துக் கொள்வதா வேலை,  மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், பாதுகாப்பதுமே அதன் கடமை என கருதப்படுகிறது
தபார் : ஆனால், அரசு தாக்கப்படுமானால், அது மக்கள் தாக்கப்படுவதாகவே பொருள். மேலும்…
அ.ராய் : கரன., அரசு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை. அதுதான் தாக்குதலைத் தூண்டுகிறது.  அதைத்தான் நான் புரியவைக்க முயல்கிறேன்.  தனது சொந்த அரசியல் சாசனத்துக்கு முரணாகச் செயல்படுவதுடன் ஒரு தாக்குதலையும் முன் தள்ளுகிறது. சமீபத்திய பஞ்சாயத் ராஜ் அறிக்கையைப் பார்த்தீர்களானால், அதன் கண்டன அத்தியாயத்தில் அரசு தனது செயல்பாடுகளில் முற்றிலும் சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.  ஒரு மாறுதலுக்கு நான் உங்களை கேட்கிறேன், ராணுவம், போலீசு, துணை ராணுவப்படை, விமானப்படை அனைத்தும் கூடி ஏழை மக்கள் மீது ஒரு போரைத் தொடுக்கத் தொடங்கும்போது அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?  இடத்தைக் காலி செய்துவிட்டு கூடாரத்தில் குடியேறவேண்டுமென்றா? தங்களது நிலத்தைப் பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சுரங்கத்துறையினர் அபகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றா?
தபார் : ஆக, மாவோயிஸ்டுகளும் மற்ற அனைத்து எதிர்ப்பு இயக்கத்தினரும் இதை எதிர்த்துப் போராடுவதைத் தவிர்த்த வேறு வாய்ப்புகள் இல்லை என்று சொல்கிறீர்கள், இல்லையா?
அ. ராய் : நான் என்ன சொல்கிறேன் என்றால், அரசு வன்முறையற்ற எதிர்ப்புக்கு மதிப்பளிக்குமேயானால் -இந்த அரசு மதிப்பளிக்காவிட்டாலும் – பல ஆண்டுகளாக, பல பிரச்சனைகளுக்காக  மக்கள் அமைதிவழியிலான போரட்டத்தைதான் கடைபிடித்துவந்திருக்கிறார்கள்.  நீங்கள் அந்த அகிம்சைப் பாதையை அலட்சியப்படுத்துவதன் மூலம் தன்னியல்பாக வன்முறையை பிரதானமாக வளரச் செய்கிறீர்கள். அதைத்தான் இந்த அரசு செய்கிறது.
தபார் : ஆனால், நீங்கள் கூறுகின்ற இந்த வன்முறையற்ற பாதையில்தான் மாவோயிஸ்டுகள் தங்கள் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்களா?  அது தானே பிரச்சினை.  அவர்களது லட்சியம் அவர்கள் பின்பற்றும் வழிமுறையை நியாயப்படுத்துவது போல் இருக்கிறது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம்.  கேள்வி என்னவெனில், அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்களா, இல்லையா?
அ. ராய் : என் சொற்களுக்கு நீங்கள் காதுகொடுக்கவில்லை.  பலபத்து லட்சம் மக்களை அவர்தம் மண்ணிலிருந்து பிய்த்தெறியும் கண்மூடித்தனமான அநீதி இங்கு நாளும் முன்னேறிச் செல்கிறது என்று நான் கூறுகிறேன்.  ஏன் இந்த நாட்டில் 83 கோடியே 36 லட்சம் மக்கள் 20 ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கொண்டு ஒரு நாளைத் தள்ள வேண்டியிருக்கிறது?  உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட 6 கோடி மக்களை நாம் கொண்டிருக்கிறோமே, ஏன்?  ஏன் என்றால் இந்த அரசு முகத்தைத் திருப்பிக்கொள்கிறது.  கடந்த 25 ஆண்டுகளாக இந்த அரசு அமைதிவழி கோரிக்கைகளைக் கேட்கவும் மறுத்திருக்கிறது.
தபார் : ஆகவே, மாவோயிஸ்டுகளை இதற்குப் அநீதியால் பாதிக்கப்பட்டவற்களாக நீங்கள் பார்க்கிறீர்களா..?
அ. ராய் : மக்கள் எதற்கோ பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன். மாவோயிஸ்டு கொள்கைகளை நீங்கள் பார்த்தீர்களானால், எதற்கும் பலியானவர்களாகத் தங்களை அவர்கள் கருதவில்லை.   ஆனால் இந்த அரசு இழைத்துவரும் மாபெரும் அநீதியின் காரணமாக மாவோயிஸ்டுகளின்  கொள்கை ஒரு  வெகுஜனக் கருத்தாக்கமாக பெருவாரியான மக்களிடம் எடுபடுகிறது.
தபார் : சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட எல்லாத் தவறும் அரசுத் தரப்பினுடையதுதான் இல்லையா?
அ.ராய் : ஆம்.
தபார் : இதைத் துணிந்து , வெளிப்படையாக சொல்கிறீர்கள்.. அப்படித்தானே?
அ.ராய் : நிச்சயமாக.
தபார் : பேச்சுவார்த்தையின் நிலவரம் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.  அதற்கு முன்னால், ஆசாத் பற்றிச் சொல்லுங்கள்.  மாவோயிஸ்ட் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழிவகை செய்யுமாறு சுவாமி அக்னிவேஷை உள்துறை அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.  அதன்படி அக்னிவேஷ் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார்.  மே மாதம் தொட்டு இச்சூழல் தலைதூக்குகிறது.  ஆனால் ஜூலை மாதத்தில் விவரிக்க முடியாததொரு போலீஸ் மோதலில் ஆசாத் திடீரென்று இறந்துபோகிறார்.  ஆசாதை வெளிக்கொணர்ந்து கொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித்திட்டமே இது என்று நீங்கள் நம்புகிறீர்களா?
அ. ராய் : ஆம், நம்புகிறேன்.
தபார் : உண்மையிலேயே அது அப்படித்தான் என்கிறீர்களா? ஆசாத்தைக் கொல்ல அரசு சதிவலை விரித்ததா?
அ. ராய் : வெளிவரும் உண்மைகளில் இருந்து பெறக்கூடியதாகவும், அவ்வுண்மைகள்  சுட்டிக்காட்டுவதாகவும் இம் முடிவுதான் இருக்கிறது.
தபார் : ஏன் அவர்கள் அவ்வாறு செய்தார்கள்?  பேச்சுவார்த்தைக்கான நியாயமான் எதிர்பார்ப்புகளை வைத்திருந்த ஒரு மனிதரையே அவர்கள் ஏன் கொலை செய்ய வேண்டும்?
அ. ராய் : இந்த போர் அரசின் தேவையினால் நடக்கும் ஒன்று என்று கடந்த சில மாதங்களாகவே நான் தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறேன்.  அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆதிவாசி நிலங்களைக் காலிசெய்யவும், கைமாற்றவும், கையெழுத்திடப்பட்ட நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொணரவும் இந்த போர் தேவை.  தொழில்-வர்த்தக ஏடுகளைக் கவனிப்பீர்களானால் அவர்கள் இவ்விசயத்தில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பது புரியும்.
தபார் : அரசுக்குப் போர்தான் தேவை என்றால் அதன் பேச்சுவார்த்தை முயற்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதே.
அ. ராய் : ஆமாம்.  அதற்குப் போர் தேவைப்படுகிறது.  அதே சமயம் கருணைமிகு புன்முறுவலுடன் கூடிய ஜனநாயக முகமூடியும் அதற்குத் தேவைப்படுகிறது.  எனவேதான் ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வரும்போதே மறு பக்கம் அதற்குக் குழிபறிக்கிறது.
தபார் : ஆனால், அரசு இரட்டை முகமுடையது என்ற இந்த முற்றிலும் விசித்திரமான கோட்பாட்டை ஒப்புக்கொண்டாலும்,
அ. ராய்: நான் அது இரட்டை முகமுடையது என்று சொல்லவில்லை
தபார் : ஒப்புக்கொண்டாலும்.. ஆசாத்தைக் கொல்வதன் மூலமாக அது தனது முகமூடியை ஏன் அவிழ்க்கவேண்டும், தன்னைத்தானே ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்?
அ. ராய்: ஏனென்றால், அப்போது நிகழ்ந்தனவற்றை நீங்கள் கவனித்தால், ஆசாத் அபாயகராமான அளவுக்கு நியாயமாக பேசத்துவங்கினார்…
தபார் : யாருக்கு?
அ. ராய் : நம் எல்லோருக்கும்தான்.
தபார் : ஹிந்து நாளேட்டுக்கு அளித்த ஒரு பேட்டியை வைத்தே அப்படி முடிவு கட்டிவிட்டீர்களா?
அ.ராய் : பாருங்கள் கரண், நாம் அனைவரும் ஆசாத்தை அறிவோம்.  நம்மிடையே அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.  ஏராளமாக எழுதியிருக்கிறார்.
தபார் : உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  ஆனால், மக்களுக்கு அதெல்லாம் தெரியாது.  அவர்களைப் பொருத்தவரை ஆசாத் ஒரு புதிர், அவ்வளவுதான்.
அ. ராய் : இல்லை. நிச்சயமாக இல்லை.  உதாரணமாக, அவர் அவுட் லுக் இதழுக்கு எழுதியதைப் பாருங்கள்.  அது அவர் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது.  ஆனால், அதற்கு முன்னாலேயே அனுப்பப்பட்டிருந்தது.
தபார் : ஆனால், அவர் பெரிதும் பேசத்தொடங்கினார், நியாயமானவராக தோன்றத் தொடங்கினார் என்பதால் அச்சமுற்ற அரசு அவரைக் கொன்றுவிட்டது என்ற உஙக்ளது கோட்பாட்டை ஒருவர் ஒப்புக்கொண்டாலும் கூட, அந்த அம்சங்கள் அவரை மதிக்கத்தக்க ஒரு நடுவராக அரசின் முகமூடியில் நன்கு பொருந்தக்கூடியவராக மட்டுமே செய்திருக்க முடியும்.  நிச்சயமாக, அதுவே அவரைக் கொன்றதென்பது ஒருவிதத்தில் இக்கருத்தின் நகைக்கத்தக்க முரணாகவே இருக்கிறது.
அ. ராய் : ஏன் அப்படி இருக்கவேண்டும்?  போரில் இரு தரப்புகள் இருப்பதாகக் கொள்வோம்.  இரண்டுக்கும் மேற்பட்டவை இருப்பினும், எல்லோருமே அதை இருமைப்படுத்தவே விரும்புவதால், வாதத்தின் பொருட்டு அதை ஒப்புக்கொள்வோம்.  ஒரு தரப்பு ஒரு தூதரை அனுப்ப, மறுதரப்பு அவரைக் கொலை செய்கிறதென்றால் அதற்கு என்ன பொருள்?  அத்தரப்பு அமைதியை விரும்பவில்லை என்பதுதானே.  அதுதான் இதற்குப் பொருள். இது ஒரு  அறிவார்ந்த அனுமானம்.
தபார் : ஆக இது ஒரு மோசடியான அரசு.. ?
அ. ராய்: நிச்சயமாக.
தபார் : அப்படி என்றால், நான் கேட்க விரும்பும் சிக்கலான விசயத்துக்கே வருகிறேன்.  பேச்சுவார்த்தைக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?  மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிடுவார்களேயானால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பார்வம் கொண்டிருப்பதாக அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.  ஆயுதங்களைக் கீழே போடுங்கள் பேச்சு நடத்துவோம் என்று சொல்லிக் கேட்கக்கூட இல்லை.  பலரும் இதை மிகவும் நியாயமான, சொல்லப்போனால், பெருந்தன்மையான முன்வைப்பு என்று கருதுகிறார்கள்.  பேச்சுவார்த்தை பற்றிய அரசின் நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அ. ராய்: நீங்கள் அந்த காடுகளுக்குள் சென்று அங்கு நடப்பனவற்றைக் காண்பீர்களானால் தெரியும்.  இரண்டு லட்சம்  துணை ராணுவத் துருப்புகள் அந்த ஆதிவாசி கிராமங்களைச் ரோந்து வருகின்றன.  சுற்றிவளைப்பும் தேடுதல் வேட்டைகளும் நடத்தப்படுகின்றன, படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன, மொத்தப்பகுதியும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் வன்முறையைக் கைவிடுங்கள் என்று சொல்வதன் பொருள்தான் என்ன?  சண்டை நிறுத்தம், இருதரப்பு சண்டை நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதுவே உண்மையில் நியாயமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன்.  பிறகு நாம் பேசலாம்.  அதைவிடுத்து, நீ வன்முறையைக் கைவிடவேண்டும் என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்?
தபார் : ஆக, வன்முறையை ஒரு தரப்பு கைவிடக் கோருவது ஏற்கத் தக்கதல்ல, இருதரப்பு சண்டை நிறுத்தமே தேவை என்று கருதுகிறீர்கள், இல்லையா?
அ.ராய் : இருதரப்பு சண்டை நிறுத்தம்தான் அவசரத் தேவை எனக் கருதுகிறேன்.
தபார் : ஒரே நேத்ததிலா?
அ.ராய் : ஆம்.  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என அரசாங்க அறிக்கைகள் சொல்லுகின்றன.  சிதம்பரம் அவர்களே அவற்றைக் கிடப்பில் போடுவேன் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.  ஏன் அவர் அவ்வாறு செய்யவில்லை?
தபார் : மாவோயிஸ்டுகளிடம் இருந்து பேச்சுவார்த்தை தொடர்பான சாதகமான சமிக்ஞை வருவதற்காக அவர் ஒருக்கால் காத்திருக்கலாம்.  தன்னிச்சையாக இதை செய்ய அவர் விரும்பாதிருக்கலாம்.
அ. ராய்: அவர்கள் இப்போது எழுத்துமூலமாக பதிலளித்திருக்கிறார்கள்.  ஆசாத் தனது எழுத்தின் மூலம் பதிலளித்தார்.
தபார் : ஆசாத் இனி இல்லை.  நான் உங்களைக் கேட்கிறேன்.  இந்த நேர்காணலின் மூலமாக, இருதரப்பும் சமகாலத்தில் என்ன செய்தால், அது ஒருக்கால் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்பது பற்றி பரிந்துரைக்கத் தொடங்கி இருக்கிறீர்கள்.  நீங்கள் மாவோயிஸ்டுகளை அறிந்திருப்பதால், அவர்களால் நம்பப்படுபவராக இருப்பதால், பேச்சுவார்த்தையில் ஒரு நடுவராக செயல்படத் தயாராக இருக்கிறீர்களா?
அ. ராய்: ஆந்திரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாகப் படித்திருந்தீர்களானால் தெரியும். யாராவது ஒருவரைப் பொருக்கி எடுத்து அவரை பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அறிவிப்பது, இப்படி இரு தரப்புமே செய்திருக்கின்றன.  சிதம்பரம் தன்னிச்சையாக சுவாமி அக்னிவேஷை தேர்ந்தெடுத்து அறிவித்தார்.  மாவோயிஸ்டுகளும் அது வேண்டும், இது வேண்டும் எனத் தங்கள் கோரிக்கைகளைத் தன்னிச்சையாக வானொலி வாயிலாக அறிவித்தனர்.  ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு இப்படி நடப்பதில்லை.  ஆந்திரத்தில், தம்மைப் பேச்சுவார்த்தைக்குப் பொருப்பானவர்களாக அமர்த்திக்கொள்ள குடிமக்கள் கமிட்டிக்குக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பிடித்தது.  நடுவராகச் செயல்படுவது ஒரு நபராக இருக்க்க் கூடாது.
தபார் : தன்னிச்சையாய்ப் பொருக்கி எடுக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும் சுவாமி அக்னிவேஷ்தான், ஆசாத்தை பேச்சுவார்த்தையின் விளிம்புவரை கொண்டுவருவதில் வெற்றிகரமாய் செயல்பட்டிருக்கிறார்.  நீங்கள் சொல்வது போல அவர் கொல்லப்பட்டார் என்ற உண்மையைத் தவிர, அக்னிவேஷ் தனது பொறுப்பைப் பெரிதும் நிறைவேற்றியிருக்கிறார்.  எனவே, நான் மீண்டும் கேட்கிறேன், நீங்கள் மாவோயிஸ்டுகளால் நம்பப்படுவதால், இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளும் வகையில், குறைந்த பட்சம் ஆங்கிலத்தில், புரியும் மொழியில் பேசுவதால், நீங்கள் ஒரு பேச்சுவார்த்தையின் நடுவராக இருக்கத் தயாரா?
அ. ராய் : பாருங்கள் கரண், அது ஒருவராகத்தான் இருக்கவேண்டும் என்று நான் கருதவில்லை.  கூட்டுச் சிந்தனைக்கும் முடிவுக்கும் பழக்கப்பட்டவர்கள் அடங்கிய ஒரு குழுவினராக அது அமைய வேண்டும் என நான் கருதுகிறேன்.
தபார் : ஒரு கமிட்டியாக…?
அ. ராய் : நிச்சயமாக. அதுதான் ஆந்திரத்தில் நிகழ்ந்தது.  சிலர் அடங்கிய கமிட்டி அங்கு இருந்தது.
தபார் : அது ஒரு குளறுபடி இல்லையா?
அ. ராய் : இல்லை.  அது அத்தியாவசியமான ஒன்று.
தபார் : அதில் ஒரு உறுப்பினராக இருப்பீர்களா?
அ. ராய் : நான் அதில் பொருந்துவேன் என்று கருதவில்லை.  நான் சுதந்திர சிந்தனையுடயவள்.
தபார் : நீங்கள் அந்த கமிட்டியில் ஒருவராக இருக்கத் தாயாரா?
அ. ராய்: அப்படி இல்லை.  நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை.  ஏனென்றால் அதற்கான திறமை எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.  அதற்குப் பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்.
தபார் : ஜீன் மாதம் ஹிந்து பத்திரிகைக்கு எழுதிய நீதிபதி கிருஷ்ணய்யர், மாவோயிஸ்டுகள் நிபந்தனையற்ற வகையில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார்.  நீங்கள் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவீர்களா?
அ. ராய் : மாட்டேன்.  இரண்டு லட்சம் துணைராணுவத் துருப்புகள் அந்த கிராமங்களை நெருக்கிக்கொண்டிருக்கையில் நான் அவ்வாறு செய்யமாட்டேன்.  நிபந்தனையற்ற வகையில் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என்று சொல்கிறேன். பிறகு நீங்கள் அதன் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.
தபார் : ஆனால், நடுவராக இருந்தோ, கமிட்டியில் ஒரு அங்கமாக இருந்தோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நீங்கள் தயாராக இல்லை.
அ. ராய் : நான் முயற்சிக்கிறேன்.
தபார் : முயற்சிக்கிறேன்! அட, உடனே உங்கள் நிலையில் தலைகீழ் மாற்றமா?
அ. ராய் : இதைப் பற்றி எப்படி யோசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.
தபார் : கொஞ்சம் தள்ளிவிட்டால், இதமாக எடுத்துச் சொன்னால் ஒருக்கால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.
அ. ராய் : நீங்கள் ஒரு அரசியல்வாதியிடம் பேசுவதைப் போல என்னிடம் பேசுகிறீர்கள். ‘தேர்தலில் போட்டியிடுவீர்களா?’
தபார் : இல்லை.  எனது கேள்விக்குத் தெளிவான பதிலை நீங்கள் அளிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான்.  நான் என்ன உணர்கிறேன் என்றால், உங்களிடம் ஒரு உந்துதல் இருக்கிறது ஆனால் தெளிவான முடிவெடுக்க தயங்குறீர்கள்.
அ. ராய் : நாம் எல்லோருமே நம்மால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்று கருதுகிறேன். ஆனால், கமிட்டி போன்றவற்றில் அங்கம் வகிக்க நான் பொருத்தமானவள் அல்ல என்று உறுதியாக உணர்கிறேன்.  நீண்ட அனுபவம் உள்ள B.D. சர்மா போன்று பேச்சுவார்த்தைகளில் அனுபவம் மிக்கவர்களைக் கொண்ட ஒரு கமிட்டி அவசியம் என்று நான் கருதுகிறேன்.
தபார் : சற்று மாறுபட்ட ஒரு விசயத்துக்கு வருவோம்.  இந்த அரசாங்கம், குறிப்பாக உள்துறை அமைச்சர், மாவோயிஸ்டு குறிக்கோள்களில் அனுதாபம் கொண்டவர்களை அவர்களது கூட்டாளிகள் என்று குறிப்பிடுகிறார்.  செய்தி ஊடகங்களின் ஒரு பிரிவினர் அவர்களைத் துரோகிகள் என்றும் அழைக்கிறார்கள்.  அவ்வகையினரில் முதன்மையானவர் அருந்ததி ராயாகத்தான் இருக்கிறார். இப்படி முத்திரை குத்தப்படுவதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
அ. ராய் : என்ன சொல்ல, எல்லாம் அதே பழங்கதை தானே.
தபார் : ஆனால் இப்போக்கு ஒவ்வொரு முறையும் மூர்க்கமாய்த் தொடர்கிறதே.
அ.ராய் : இந்த அரசு, மற்றும் இப்பிரச்சினையில் தெளிவாய் ஒரு பக்கச் சார்பு எடுக்கும் பெரும்பாலான பத்திரிகைகள் எல்லோருமே ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.  காரணம் என்னவெனில், அடர்ந்த காடுகளில் புதைந்து ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் இருந்து, இந்தக் காட்டுவேட்டை தொடங்கியதும், ஏராளமான மனித உரிமை செயல்வீரர்களும், அறிவுஜீவிகளும் முன்வந்து இது எங்களுக்கு ஏற்புடையதல்ல என அறைந்து கூறினர்.  இச் செயல் அதுவரை இயல்பாய் நடந்துவந்த இலை மறை காயாக வைத்திருந்த விசயத்தை அம்பலப்படுத்தி ஆட்டங்காணச் செய்தது.
தபார் : ஆக, அரசின் நிலையிலான உறுதிப்பாடு மாவோயிஸ்டுகளை ஆதரித்த அறிவுஜீவிகளால் பலவீனப்படுத்தப்பட்டு  ஆட்டங்கண்டது.  அதனால்தான் அரசு அவர்களை “கூட்டாளிகள்” என்று முத்திரை குத்துகிறது.. இல்லையா?
அ. ராய்: மீண்டும் நீங்கள் மாவோயிஸ்டுகள் என்றே குறிப்பிடுகிறீர்கள்.
தபார் : ஆனால், அதனால் தானே அரசு அவர்களை கூட்டாளிகள் என்று அழைக்கிறது?
அ. ராய் : என்ன நடந்திருக்கிறது என்றால், இந்த அரசு தன்னுடன் ஒத்துப்போகாத எல்லோரையும் குறிப்பிடும் அளவுக்கு மாவோயிஸ்ட் என்பதன் வரையறுப்பை நீட்டித்திருக்கிறது.  என்னைப் போன்றவர்கள் நிலைமையைச் சிக்கலாக்கிவிட்டோம் என்பதுதான்.  இந்த ஏச்சுகள் எல்லாம் அவ்வளவு சல்லிசாக எடுத்துக்கொள்ளக் கூடிய விசயமல்லதான். இருப்பினும்,  நான் எனக்குத் தெளிவாய்ப் பட்டதைச் சொல்ல விரும்புகிறேன் என்பதால் அது என்னைப் பாதிக்கவில்லை.  எனக்கு பெயர்கள் வழங்குவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.
தபார் : மேலும், இந்த அரசு உங்களைக் ’கூட்டாளி’  என்று அழைப்பது ஒரு விதத்தில், நீங்கள் உண்மையிலேயே இந்த அரசை நிம்மதி குலையச்  செய்திருக்கிறீர்கள் என்பதற்கு நிரூபணம்.
அ. ராய்: நான் இந்த அரசை நிம்மதி குலையச் செய்திருப்பேன் என்றால், அதற்காகப் பெருமைப்படுகிறேன்.  ஏனென்றால், அது செய்யும் வேலைக்கு அது நிம்மதியற்றுத் திரியத்தான் வேண்டும்.
தபார் : தங்களுடன் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன்

Tuesday, October 5, 2010

இராமாயணம் இந்துக்களின் புனிதமான காப்பியம். காப்பிய நாயகன் இராமன் கடவுள் அவதாரம். இத்தகைய பெருமை கொண்ட இராமாயணம் கிரேக்க காவியத்தின் வெறும் தழுவலா?

http://kuttipisasu.blogspot.com/2007/11/blog-post_08.html

ஈழமும் இந்துதேசியமும்

http://kuttipisasu.blogspot.com/2007/11/blog-post_3782.html

வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள்(மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை இழந்தவர்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறார்கள். "history must be written of, by, and for the survivors" என்ற பழமொழிக்கேற்ப வரலாறு எழுதப்படுகிறது. இதனை நாம் உணர்ந்து கொள்ளாவிடில் படித்தும் அறிவில்லாதவர்களாகவே இருக்க வேண்டி இருக்கும். சமீபத்தில் என் நண்பருடைய விவாதிக்கும்போது, ஈழப்பிரச்சனைப் பற்றியும், இந்தியாவின் இந்து-முஸ்லீம் பிரச்சனை பற்றியும் பேச்சு வந்தது. விவாதத்தின் தொகுப்பு இது தான்.
1. தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் தான் ஈழத்தமிழர்கள்?
பாண்டியர்களும், சோழர்களும் பலம் பொருந்திய அரசர்களாக இருந்த காலத்தில், இவ்வாறான குடிபெயர்தல்கள் படையெடுப்பு மூலம் நடந்தன. ஆனால் அதற்கு முன்னரே, அங்கு ஈழத்து தமிழ்குடிகள் இருந்தன. தற்போது, சிறிலங்கா அரசின் வாதமொன்றில், தமிழர்பகுதியில் காணப்படும் பௌத்த சின்னங்களைக் கொண்டு தமிழர்கள் வந்தேறிகள் என்கிறார்கள். நாம் என்ன முதலில் இருந்தே இந்துவாக இருந்தோமா? நமது ஐம்பெரும் காப்பியங்கள் அனைத்தும் சமண, பௌத்த மதம் சார்ந்தவை. தமிழகத்தில் கூட நிறைய சமண, பௌத்த சின்னகளின் மிச்சங்கள் உண்டு. இவை பெரும்பாலும் இந்துமன்னர்களால் அழிக்கப்பட்டன. திருமங்கையாழ்வார் கூட சமண மடங்களையும், சிலைகளையும் அழித்ததாக நண்பர் ஒருவர் கூறக்கேட்டேன். இவை வரலாற்றுரீதியாக உண்மை். ஆனால் அவை (சின்னங்கள்) இன்று சிங்கள அரசால் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இவை நமது வரலாற்றை திரித்து கூறுவதற்காகவே.
நம்முடைய சமண-பௌத்திற்கு முந்தைய நிலை இன்னும் தெளிவாக தெரியவில்லை. வள்ளுவரை கூட சமணர்-பௌத்தர் என வாதங்கள் உண்டு.

16-ம் நூற்றாண்டுகளில் அநுராதபுரத்திலும், கண்டியிலும் இருந்த விஜயநகர நாயக்கர்கள் கூட இன்று சிங்களவர்களாக அடையாளம் காணப்படும்போது. ஏன் 2000-2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பௌத்த தமிழர்கள் சிங்களவர்களாக அடையாளம் காணப்படக்கூடாது. (800 ஆண்டுகளுக்கு முன் நம்முடன் சேரநாட்டு தமிழர்களாக இருந்தவர்கள், இன்று மலையாளிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளவில்லையா?) இந்துக்களாக மாறிய பிறகு நாமே கூட பௌத்த தமிழர்களுடன் போரிட்டு இருக்கலாம். அவர்களின் விகாரைகளை உடைத்திருக்கலாம். ஆனால் சிங்களவர் சற்றும் சிந்தியாமல் 'மகாவம்சம்" போன்ற பழைய பஞ்சாங்கங்களில் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
சில தமிழக மற்றும் ஈழ தமிழர்கள் கூட நாம் பௌத்தர்களாக வாழ்ந்தோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தாங்கள் ஒரு தூய இந்து பின்னனி கொண்டவராகவே பறைசாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். சிறிதாவது மேல்கூறியதை சற்று சிந்திக்க வேண்டும்.
2. தமிழீழம் சிறிலங்காவின் ஐக்கியத்தை சீர்குலைகிறதா? ஐக்கிய இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது தவறா?
இரண்டு கேள்விக்கு பதில் ஒன்றுதான். முன்பு இந்தியா-பாக்கிஸ்தான் பிரியும் போது, முஸ்லீம்கள் மனநிலை எப்படி இருந்ததோ? அதே மனநிலையில் தான் இப்போது ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். சிறுபாண்மையினராக இருந்த முஸ்லீம்களுக்கு போதிய சலுகை வழங்கததாலும், இந்துக்கள் பெரும்பாலான வேலைகளை ஆக்கிரமித்ததாலும் தான் பிரிவு ஏற்பட்டது. முஸ்லீம் பெரும்பாண்மைப் பகுதிகள் பாக்கிஸ்தானுன் சேர்க்க முடிவெடுத்த தருவாயில், லாகூர் இந்தியாவில் சென்றுவிடுமோ என்ற எண்ணத்தில் 1000-க்கும் அதிகமான இந்துக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்(பிரிவினையின் போது லாகூரில் இந்துக்கள் அதிகம்).அதேபோல, இந்தியாவிலும் எல்லையிலுள்ள நகரங்களில் இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டன. பல இந்து-முஸ்லீம் உடன்பிறப்புகள் கொல்லப்பட்டனர். 15 நாட்கள் நீடித்த பிரிவினை இழுபறியால் 5000 கொலைகள் நிகழ்ந்தன. இவையெல்லாம் எவற்றால் சற்று சிந்திக்க வேண்டும். வெளியிருந்து வ்ந்த முஸ்லீம்களுக்கு எதற்கு பாக்கிஸ்தான் என்று பேசுபவர்கள் எல்லாரும் ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் தான். இந்தியாவிலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் வீடுகளையும் நிலங்களையும் பொருட்களையும் விட்டுவிட்டு வெளியேறும். அவலம் நிகழாதிருக்க முஸ்லீம்களுக்கு போதிய இடஒதுக்கீடு வழ்ங்கியிருக்க வேண்டும் அல்லது முறையாக உடனடியாக பாக்கிஸ்தானை அமைதியாக பிரித்திருக்க வேண்டும். அப்படி பிரித்திருந்தால், இன்று இந்தியாவும் பாக்கிஸ்தானும் சகோதர நாடாக இருந்திருக்கும். ஆனால் அந்த பிரிவினை பலரது குருதியின் நெடியிலேயே ஏற்பட்டது. ஒருவேளை இன்று ஐக்கிய இந்திய கோட்பாடு பேசுபவர் சொல்வது போல, இந்தியா பிரியாமல் இருந்திருந்தால், இலங்கையின் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும்.இன்று காஷ்மீரில் நிகழும் போர், இந்தியா முழுக்க ஜிகாதியாக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
நண்பர் ஒவ்வொரு கேள்விகளாக அடுக்கிச்செல்ல நானும் பொறுமையுடன் பதில் கூறினேன். அவருடைய விவாதத்தில் ஒன்று புரிந்தது, அவருக்கு தமிழரின் வரலாறு தெரியாது. இந்தியாவின் பூர்வீகம் தெரியாது. இப்படிப்பட்டவர்க்கு இலங்கை பற்றிய ஞானம் என்ன இருக்கும் என ஊகிக்க இயலவில்லை. இப்படி ஒருவர் அல்ல பலபேர் உள்ளனர் இந்தியாவில். இவர்களின் கனவு இதுதான் இந்தியா ஒரு இந்து நாடு (இதைத் தான் ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் புருடா விடுவார்கள்). படத்திலுள்ள பாரதமாதா உருவத்தை முஸ்லீம் மக்கள் வழிபட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். கேட்டால் தேசியம் என்பார்கள்? இவர்கள் என்றாவது வடகிழக்கு மாகாண மக்களின் இன்னல்களையோ, காஷ்மீர மக்களின் துயர்களையோ கணக்கில் கொண்டதுண்டா? தெரியவில்லை. இவ்வளவு வாய்கிழிய மனிதவுரிமை, மக்களாட்சி, பண்பாடு பற்றி பேசும் இந்தியா கூட திபெத் பிரச்சனையில் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டுதான் இருக்கிறது. கேட்டால் உதைவிழும் என்ற பயம் தானே? இவர்கள் என்னடா என்றால், ஐக்கிய இந்தியா பற்றி அளந்து கொட்டுகிறார்கள்.


கிடைத்தது ராமனின் Birth Certificate!

கிடைத்தது ராமனின் Birth Certificate!

ஸ்ரீ ராமர் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளை அறிவியலின் துணைகொண்டு ஆய்ந்தறிந்து அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர்.
ராமர் பிறந்த இடத்தில் கோயிலைக் கட்ட வேண்டும் கட்ட வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா)

இந்நிலையில் தசரதன் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ராமரின் birth certificate கிடைத்துள்ளது. சமஸ்கிருத மொழியில் உள்ள இந்த சான்றிதழில் பிறந்தநாள் கி.மு.5114 ஜனவரி 10 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

17.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்தார் என்று நமது புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் கி.பி 2007க்கும் கி.மு.5114-க்கும் இடையில் 7121 ஆண்டுகள் மட்டுமே கணக்கில் வருகிறது. மீதம் 17,42,879 ஆண்டுகள் கி.மு.வுக்கும், கி.பி.க்கும் இடையில் விடுபட்டுப் போயிருப்பதாகவும், இடைப்பட்ட அந்தக் காலத்தை ராம சூன்யம் என்றழைக்கலாம் என்றும் அவ்வாராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும் கிடைத்திருக்கும் சான்றிதழில், தாயார் என்ற இடத்தில் கோசலையின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தந்தையார் என்ற இடத்தில் ஏகப்பட்ட அடித்தல் திருத்தல்இருப்பதால் காப்பாளர் என்ற இடத்தில் தசரதனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் ராமனின் குரு கையொப்பமிட்ட விசுவாமித்திரர் T.C, Mark sheet உள்ளிட்டவை கிடைத்திருப்பதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது


http://princenrsama.blogspot.com/2007/11/birth-certificate.html

Sunday, October 3, 2010

ORKUT - உலக தமிழ் மக்கள் அரங்கத்தின் இந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்

“இந்து தீவிரவாதம்” என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்துவந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.

முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை. தேவேந்திர குப்தா கைதுசெய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். ஆனால் இப்போது “இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது” – என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்



2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதிராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJI) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதிராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதிராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதிராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.

அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்


இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஸ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அப்துல் சமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஸ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது. கைகாட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும்.



ஹைதிராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன. 2002-03வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்


2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஸ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில்ள் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.

”கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவன்னம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன” – என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.

மெக்கா மசூதி, மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ இப்போதுதான் ஆலோசித்தி வருகிறது

2008 செப்டம்பர் 29இல் மலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான். ஹைதிராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர். அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும்.

4,528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. “இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்” என்றும் “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர். அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, “தனி இந்து தேசம்” அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு “கர்கரே சந்திப்பு” என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன – முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை. ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS. 68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது ATS

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஸ்ட்ரா , இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் “கல்சங்கரா” என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது. அஜ்மீர், மெக்கா மசூதி, மலேகான், சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும். 

(Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.)

http://www.outlookindia.com/article.aspx?266145




“மைனாரிட்டி”களைச் சிக்க வைத்த கறுப்பு ஆடுகள்!

கோவையில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில், திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா தொடர்ந்து பேசி வருகிறார் என்றும், நாங்கள் எப்போதும் மைனாரிட்டிகளுக்காகக் குரல் கொடுக் கும் அரசுதான் என்று முதல்வர் கருணா நிதி கூறியுள்ளார். 


கோவையில் 1998 பிப்ரவரி 14ம் தேதி நடந்து கொடூர குண்டு வெடிப்பு சம் பவத்தின் வடுக்கள் மெல்ல ஆறிக் கொண்டு வந்தன. ரணங்களின் சுவடுக ளும் மெல்ல மறைந்து இயல்பு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. ஒரு அதிகாலை வேளையில் பத்திரிகை களை புரட்டியோரெல்லாம் பதறிப் போனார்கள். நெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டியது போன்று பீதிக்குள்ளானார்கள்.“கோவையை தகர்க்க சதி, வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத் தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலீஸ் அலுவலகங்களை தகர்க்க சதி” என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன. இதுதான் மக்களின் பீதிக்கு காரணம்.

பீதி அன்றோடு முடியவில்லை. “இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு”, என்று அடுத்த நாளும் தொடர்ந் தது. அனைவருக்கும் கிடைத்த ஒரே நிம்மதி, இந்த சதி முறியடிக்கப்பட்டது என்று அவை கூறியதுதான்.
 என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலோசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலீசார் கைது செய்தனர். 

பைப் குண் டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதி யை திறமையாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத் தனூர் பி-13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.


அப்போது தமிழகத்தின் பட்ஜெட் பரபரப்புகள் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு தர்பாரே பத்து நாளாக ஆக்கிரமித்திருந்தது.
காவல்துறை யின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன. சில தகவல்களைத் திரட் டின. ஆனாலும் சதியின் ஆழ, அகலங் களைத் தொடமுடியவில்லை. 

ஆனாலும் இந்தத் தகவல்கள் சந்தேகம் தருகின்றன, முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கின. கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறையிட்டன.

எதிர்ப்புக்குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமை யில் விசாரணை நடைபெற்றது. சில சந் தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடை பெற்றார். வழக்கு சிபிசிஐடி-யின் வசம் போனது. 

அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவ ராக ஆர்.பாலன் களமிறங்கினார். ஏறத்தாழ 15 மாதகால விசாரணைக்குப் பின் தன் னுடைய இறுதி அறிக்கையில், “இரத் தினச்சுருக்கமாகச் சொல்வதா னால் பி-13 போத்தனூர் காவல் நிலையத் தில் குற்ற எண் 1067/2006 ல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ- வெடிபொருட் கள் சட்டம் 1908, பிரிவு-5ன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல றிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட தாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக் கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் ஜோடிக்கப்பட்டவை, பொய்யா னவை என்று என்னுடைய விசாரணை யில் தெரியவந்தது. 

மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட் சியங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்து கின்றன. எனவே, இது பொய்வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக் கிறேன். 
ஆம். ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் செய்யப்பட்ட சித்ர வதைகள். அந்த ஐந்து குடும்பங்களும் அடைந்த வேதனை. பீதிக்குள்ளாகிப் போன அப்பாவி மக்கள். இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை? இந்தக் காயத்திற்கு மருந்திடுவது யார்?


சி.பி.சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண் டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 

எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு நாயகன் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாள ராக தொடர்கிறார்.

அப்பாவி இளைஞர்கள் குண்டு தயா ரிக்கவில்லை என்றாகி விட்டது. அப்படி யானால் குண்டுவைத்து நாடகமாடியது போலீஸ் தானே? அதற்கு தண்டனை தர வேண்டும் அல்லவா? 


அதுதான் வெடிக் கவே இல்லையே என்று தமிழக அரசு விட்டுவிட்டது போலும். 

‘நீதிபதி ராஜீந்திர சச்சார் குழு தனது அறிக்கையில் சொல் லுகிறது. காவல் துறையின் சகலமட்டத் திலும் குறிப்பிட்ட அளவு சிறுபான்மையி னர் இருக்கவேண்டும். குறிப்பாக முஸ் லிம்கள் வசிக்கும் பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம் காவலர்கள் இருக்க வேண்டும் என்று. மதச்சார்பற்ற மாண்பு களை உயர்த்திப் பிடிக்க வேண்டுமானால் இது போன்ற சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்’. 

கோவையில் காவல் துறை நடத்திய நாடகம் முதல்வர் கருணா நிதியின் மைனாரிட்டிகளுக்காகக் குரல் கொடுக்கும் அரசு பொறுப்பில் இருக்கும்போது தான் நடந்துள்ளது. நாடகம் நடத்தியவர்கள் சுதந்திரமாக உலா வந்து கொண்டி ருக்கிறார்கள்.


நாடகம் நடந்த அதே கோவை மண்ணில் மைனாரிட்டிகளின் அரசுதான் என்று பெருமையோடு சொல்லிவிட்டு சென்னை திரும்பிவிட்டார் தமிழக முதல்வர்.

தீக்கதிர் -எம்.சக்தி-



உலக தமி்ழ் மக்கள் அரங்கம் -ORKUT

அயோத்தி சவுக்கிலிருந்து


அதிகாரிகள் தவறு செய்தால் என்ன ஆகும் என்பதற்கு அயோத்தி வரலாறே ஒரு சான்று.   அந்த டிசம்பர் மாத நள்ளிரவில், 1949ல், 50 பேர் கொண்ட ஒரு கும்பல், மசூதியின் உள்ளே புகுந்து, சிலைகளை வைக்கிறது. இந்தத் தகவலை கேள்விப் பட்ட நேரு, உள்துறை அமைச்சரை அழைத்து, உடனடியாக அந்த சிலைகளை அகற்ற உத்தரவிடுகிறார்.   அவரும், பைசாபாத் டெபுடி கமிஷனராக இருந்த கே.கே.நய்யாரிடம், சிலைகளை அகற்றுமாறு உத்தரவிடுகிறார். நேரு சிலைகளை அகற்ற உத்தரவிட, அவர் சொன்ன காரணம், “மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான முன்னுதாரணம் இது“.

ஆனால், பைசாபாத் டெபுடி கமிஷனர் கே.கே.நய்யார், சிலைகளை அகற்ற மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம், “சிலைகளை வைப்பதற்கு பின்னால் உள்ள உணர்வுகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது “ என்பதுதான் அது. இந்த கே.கே.நய்யார், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பிஜேபியின் அப்போதைய வடிவமான ஜன் சங்கின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது துணை செய்தி.

அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போது உணர்கிறீர்களா ? அன்று, கே.கே.நய்யார் மனசாட்சிப் படி நடந்து கொண்டு, சிலைகளை அகற்றியிருந்தால், இன்று 60 ஆண்டுகளாக, இந்துக்களும், முஸ்லீம்களும் இப்படி எதிரும் புதிருமாக நின்று கொண்டிருப்பார்களா ? இந்த பிரச்சினைதான் இப்படி ஒரு வடிவத்தை பெற்றிருக்குமா ?

அதனால்தான் சவுக்கு, அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.




Wednesday, September 29, 2010

அயோத்தி http://www.saravanakumaran.com/2010/09/blog-post_24.html

http://www.saravanakumaran.com/2010/09/blog-post_24.html  


அயோத்தி இந்தியாவின் இதயப்பகுதியில் இருப்பதாலோ என்னவோ, அங்கு விழுந்த அடி காலத்திற்கும் இந்தியாவின் தேகமெங்கும் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வேண்டுமானால் 1992 நிகழ்வு, பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கலாம். ஆனால், அடிப்படை பிரச்சினை 1885 யிலேயே வேர் விட தொடங்கிவிட்டது.



இந்து மத நம்பிக்கைபடி அயோத்தி, தசரதன் ஆண்ட நகரம். ராமர் பிறந்த மண். தற்போது இங்கு இருக்கும் பாபர் மசூதி, முகாலய அரசர் பாபரின் தளபதி மிர் பஹியால் கட்டப்பட்டது. அவரை இங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதியை கட்டினாரா என்பது இந்தியாவிற்கு தலைவலியை கொடுக்கும் சர்ச்சைக்குரிய கேள்வி. பதிலுக்கு மொத்த நாடும் காத்திருக்கிறது.

1885 இல் ரகுபர் தாஸ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அயோத்தியில் பாபர் மசூதிக்கு பக்கமிருக்கும் அவருடைய நிலத்தில் ஒரு திண்டு (திண்ணை போன்ற மேடை) இருந்தது. அது தான் ராமர் பிறந்ததாக நம்பப்பட்டு வந்த இடம். அதில் கோவில் கட்ட அனுமதியளிக்கும் படி ஒரு வழக்கு தொடர்ந்தார். இடம் அவருடையதாக இருந்தாலும், பக்கத்திலேயே மசூதி இருப்பதால் கோவில் கட்ட அனுமதிக்க முடியாது என்று ஃபைசாபாத் துணை நீதிபதி தீர்ப்பளித்தார். இதே வழக்கு ஃபைசாபாத் மாவட்ட நீதிபதியிடம் செல்ல, அவரும் அனுமதி மறுத்தார். “என்னத்தான் இந்துக்களின் புனிதத்தலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டு இருந்தாலும், இப்ப ஒண்ணும் பண்ண முடியாது. எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கட்டும்” என்றார் அந்த ஆங்கிலேயே நீதிபதி சம்பியர். 

பிறகு இரு மதத்தினரும் இந்த இடத்தில் வழிபாடு நடத்தி வந்தனர்.

1934இல் ஒரு பசு கொல்லப்பட்டதால் உருவான கலவரத்தில் மசூதி தாக்கப்பட்டது. அரசே அதை சரி செய்தும் கொடுத்தது.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது. 1949 இல் மசூதிக்குள் ஒரு ராமர் சிலை வைக்கப்பட்டது. யார் வைத்தது? எப்படி வைக்கப்பட்டது? தெரியாது. ஆனால், அதற்கு இந்துக்கள் கூட்டம் கூடியது. பூஜைகளும் நடத்தப்பட்டது. பிறகு கூட்டம் தடுக்கப்பட்டு, மசூதி பூட்டப்பட்டாலும், அந்த சிலை வெளியே எடுக்கப்படவில்லை. அந்த சிலையை வெளியே எடுக்க, யாருக்கும் தைரியம் வரவில்லை. அப்போதைய பிரதமர் நேரு ஆணையிட்டும், யாரும் எடுக்க தயாராக இல்லை. அந்த ஊர் மாஜிஸ்ட்ரேட், “என்னை வேலைவிட்டு போக சொன்னாலும் சொல்லுங்க, அந்த சிலை எடுக்க சொல்லாதீங்க” என்றார்.

ஃபைசாபாத் கமிஷனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த சிலையை தற்சமயம் எடுப்பது சரிப்பட்டு வராது. கொஞ்ச நாள் பொறுப்போம். எல்லாம் அடங்கிய பிறகு முடிவெடுப்போம்.

அவர் சொன்னது போலவே சில காலம் ஏதும் பிரச்சினை இல்லாமல் சென்றது. 1949 இல் நகர மாஜிஸ்ட்ரேட் ஆணையின்படி, அந்த இடம் நகராட்சி சேர்மனால் கையகப்படுத்தப்பட்டது.

திரும்ப 1950 இல் கோபால் சிங் என்பவர் மசூதிக்குள் ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும், உள்ளூர் பூசாரி ஒருவர் மட்டும் உள்ளே தினமும் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அதே ஆண்டில் வழங்கப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பில், “இந்த மசூதி முஸ்லீம்களால் பல ஆண்டு காலம், வழிப்பாட்டுக்காக பயன்பட்டு வந்ததாகவும், அது ராமரின் வழிப்பாட்டு தலமாக இருந்ததில்லை எனவும்” கூறப்பட்டது. ராமர் சிலை ரகசியமாக, தவறாக உள்ளே வைக்கப்பட்டதாக அந்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது.

1955 இல் அந்த இடத்திற்கு உரிமை கோரி நின்மோஹி அஹாரா என்பவரும், மொகமது ஹசிம் என்பவர் தலைமையில் ஐந்து முஸ்லிம்கள் அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு தீர்ப்பளித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், தற்போது நிலவும் நிலையிலேயே நீடிக்குமாறு தீர்ப்பளித்தனர். பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்தில் ஒரு முடிவு கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறினாலும், ஒன்றும் நடக்கவில்லை. 

1961 இல் ஹசிம் இடத்தை முஸ்லீம்களிடம் திரும்ப வழங்க கோரி இன்னொரு வழக்கு தொடர்ந்தார். 1964 இல் இதை பற்றிய அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கிற்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. 1968 இல் அந்த இடத்திற்கு ஒரு பொறுப்பாளரை நீதிமன்றம் நியமித்தது. ஆனால், 1971 இல் இன்னொரு வழக்கு தொடரப்பட்டதால் அவருக்கு வேலை இல்லாமல் போனது.

1983 இல் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த பிரச்சினையை பெரியளவில் எடுத்த செல்லும் வரை, அந்த வழக்கு கண்டுக்கொள்ளப்படவில்லை. பிரச்சினையின் தீவிரம் கூட கூட, ஃபைசாபாத் நீதிமன்றம் 1886இல் அந்த இடத்தை இழுத்து மூடியது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டை சந்தித்து ராம தரிசனத்திற்கு அனுமதி கோர, அதற்கு அவர் வழங்கிய ஆணை, கடும் சூட்டை கிளப்பியது. கலவரம் ஆரம்பித்தது.

நீதிபதி பாண்டே கூறியது என்னவென்றால், “இருதரப்பையும் விசாரித்ததில், அந்த இடத்தை திறந்து விடுவதாலும், சிலைகளுக்கு பூஜை செய்வதாலும் முஸ்லீம் மக்களுக்கு எந்த பிரச்சினை இல்லையென்று தெரிகிறது. திறந்துவிடுவதால் ஒன்றும் வானம் இடிந்து விழ போவதில்லை”.

இதை தொடர்ந்து வக்பூ வாரியமும், பாப்ரி மஸ்ஜித் செயல் குழுவும் அலாகாபாத் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மதவாதிகளுக்கு இது முழு நேர தொழிலானது. கரசேவகர்கள் பிஸியானார்கள். 1990 இல் முலாயம் சிங் ஆட்சியில், கரசேவகர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தப்பட, இதை பிரச்சினையாக்கி பாரதீய ஜனதா உத்திரப்பிரதேசத்தில் 1991 ஆட்சியை பிடித்தது. பாஜக முதல்வர், மசூதியை சுற்றி அமைந்துள்ள இரண்டே முக்கால் ஏக்கரை, கோவில் கட்டுவதற்காக கையகப்படுத்தினார். பாப்ரி மஸ்ஜித் செயல் குழு அப்படியேதும் கட்டப்படாமல் இருக்க தடைக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

1992இல் பாஜக தலைமையின் முன்னிலையில் மசூதி தகர்க்கப்பட்டது. இந்தியாவே ஆட்டம் கண்டது. கல்யாண் சிங் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றி 67 ஏக்கர், மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு, இந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு முன்பு, ராமர் கோவில் இருந்ததா? என்று கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு, அதன் மேல் முடிவெடுக்க இம்மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் கூடுகிறது.

---

வழக்கின் தீர்ப்பு, அங்கு ராமர் கோவில் இருந்ததா இல்லையா என்பதை குறித்தே அமையும். தீர்ப்பையொட்டி கலவரம் ஏற்படலாம் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும், பாதிக்கப்பட்ட அணி மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்லும். முடிவில், அதுவும் இழுக்கப்பட்டு இழுக்கப்பட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை அறிய, நாமெல்லாம் இருப்போமா என்பதே சந்தேகம் தான்.

ஒரு சாதாரண இடப்பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டால், என்னத்தான் முன்பு ராமர் கோவில் இருந்தாலும், 400 ஆண்டுகளுக்கு மேலாக மசூதி இருப்பதால், அதில் கோவில் கட்ட சட்டரீதியாக இடமில்லை. இல்லாவிட்டால், இப்போது நாம் இருக்கும் இடமெல்லாம் நமக்கில்லாமல் போகலாம். இது என் மூதாதையர் இடம், அது என் மூதாதையர் இடம் என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்.

இப்பிரச்சினை பெரிதாக காரணம், அரசியல்வாதிகளே. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, இது ஒரு முக்கிய காரணம். ஆனால், முன்பு இருந்தது போல தற்போது மக்களிடம் இதற்கு ஈடுபாடு அதிகமில்லை. அதே சமயம், பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு, அப்போதைய தொழிலதிபர்களும் காரணமாக இருந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், தொழில் சூழல் நன்றாக அமையும் என்று ஒரு நம்பிக்கையிருந்ததால், அவர்களது ஆதரவு இருந்தது. ஆனால், தற்போது தொழிலதிபர்களின் பிரதிநிதியாக பிரதமராக செயல்படுவதால், காங்கிரஸிற்கு அவர்களது முழு ஆதரவும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மதரீதியாக பிரச்சினை ஏற்பட்டு, சுமூகமான தொழிற்சூழல் கெட தொழிற்துறை விரும்பாததால், அவர்களை காப்பதற்காக, காங்கிரஸ் இப்பிரச்சினையை தள்ளிப்போடவும், முக்கியத்துவம் கொடுக்காமல் கண்டுக்கொள்ளாமலும் இருக்கவே முயலும். ஏன், பாஜகவும் இதை பெரிதாக பிரச்சினையாக்காது என்றே கருதப்படுகிறது.

எப்படியோ, இவ்வழக்கின் தீர்ப்பில் நடுநிலைமை சாத்தியம் இல்லை. தலைவலியாகத்தான் இருக்கப்போகிறது. இந்திய நீதித்துறையின் பெரும் பிரச்சினையான கால விரயமே, இப்பிரச்சினையை காக்கக்கூடும். தீர்ப்பு வழங்கப்போகும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறுவதால், அதன் பிறகு உடனே தீர்ப்பு வழங்க முடியாது. அச்சமயம் விசாரணை திரும்ப முதலில் இருந்து நடைப்பெறும்.

நாமும் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.