free counters

Sunday, October 3, 2010

அயோத்தி சவுக்கிலிருந்து


அதிகாரிகள் தவறு செய்தால் என்ன ஆகும் என்பதற்கு அயோத்தி வரலாறே ஒரு சான்று.   அந்த டிசம்பர் மாத நள்ளிரவில், 1949ல், 50 பேர் கொண்ட ஒரு கும்பல், மசூதியின் உள்ளே புகுந்து, சிலைகளை வைக்கிறது. இந்தத் தகவலை கேள்விப் பட்ட நேரு, உள்துறை அமைச்சரை அழைத்து, உடனடியாக அந்த சிலைகளை அகற்ற உத்தரவிடுகிறார்.   அவரும், பைசாபாத் டெபுடி கமிஷனராக இருந்த கே.கே.நய்யாரிடம், சிலைகளை அகற்றுமாறு உத்தரவிடுகிறார். நேரு சிலைகளை அகற்ற உத்தரவிட, அவர் சொன்ன காரணம், “மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான முன்னுதாரணம் இது“.

ஆனால், பைசாபாத் டெபுடி கமிஷனர் கே.கே.நய்யார், சிலைகளை அகற்ற மறுத்து விட்டார். அவர் சொன்ன காரணம், “சிலைகளை வைப்பதற்கு பின்னால் உள்ள உணர்வுகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது “ என்பதுதான் அது. இந்த கே.கே.நய்யார், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், பிஜேபியின் அப்போதைய வடிவமான ஜன் சங்கின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது துணை செய்தி.

அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போது உணர்கிறீர்களா ? அன்று, கே.கே.நய்யார் மனசாட்சிப் படி நடந்து கொண்டு, சிலைகளை அகற்றியிருந்தால், இன்று 60 ஆண்டுகளாக, இந்துக்களும், முஸ்லீம்களும் இப்படி எதிரும் புதிருமாக நின்று கொண்டிருப்பார்களா ? இந்த பிரச்சினைதான் இப்படி ஒரு வடிவத்தை பெற்றிருக்குமா ?

அதனால்தான் சவுக்கு, அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.




No comments:

Post a Comment