Sunday, September 25, 2011

யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.

http://tamilleader.in/news/921-2011-09-25-05-13-55.html



தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு 1997 ஆண்டு நவம்பர் 19ம் தேதியிட்ட இதழில் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு இது வரை விடை கிடைக்கவில்லை. தமிழன் எக்ஸ்ப்ரஸில் வெளி வந்த கட்டுரை இதோ:
Rajiv- new 11
நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. ரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது. 1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை.
சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது. ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்.
இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் 'முன் ஜோடிப்பு கதைகளை' போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின்

இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத
rajiv- assassination- 12
 கேள்விகள்: கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். 'நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்' என்று கூட சவால் விட்டார்.
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள்.
rajiv- assi-13
 அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே
 பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

rajiv new 1311. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.
13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை
rajiv new 14
 விசாரிக்கவில்லை?
16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.
17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
rajiv new 12
20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக்
vazhapadi ramamoorthy
 கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?
22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
G.K-Moopana
26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில்
 இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?
27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?
30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?
chandra sekar pm
31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன.
yasser-arafat 11
 தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது.விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.
32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?
34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

ஆதாயம்என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக,
36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?
pottu amman 11
 ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை 43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?
ஆதாயம்என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக,

துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும். அன்று எழுப்பப் பட்ட பல கேள்விகளில் ஒன்றுக்காவது இது வரை பதில் கிடைக்கவில்லையே? அது ஏன்?.ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு விடுவார்கள். 
pottu amman 11
 ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை 43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும். அன்று எழுப்பப் பட்ட பல கேள்விகளில் ஒன்றுக்காவது இது வரை பதில் கிடைக்கவில்லையே? அது ஏன்?.ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு விடுவார்கள். 
37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?
prabhakaran 11
38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?
39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?
40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த

இந்தத் தீர்ப்பை காங்கிரசார் ஏற்பார்களா

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16665




ராசீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிடக் கூடாது என்ற கோரிக்கை தமிழகமெங்கும் மென்மேலும் வலுப்பெற்று வரும் நிலையில், இப்போது காங்கிரசார் அவர்களைத் தூக்கிலிட்டே தீர வேண்டுமெனக் கூப்பாடு போடத் தொடங்கியுள்ளனர். ராசீவ் காந்தி கொலையுண்ட போது கூடவே இறந்தோர் குடும்பத்தினர் துன்பத்தில் வாடி வருவதாக ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளனர். எனவே அவர்கள் வடு ஆறுவதற்கு இவர்கள் மூவரையும் கொன்றே தீர வேண்டுமெனத் துடிக்கிறார்கள். நாட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை ஏற்கத் தவறினால் பிறகு இங்கு சட்ட ஆட்சி நடைபெறாது, காட்டாட்சியே நடைபெறும் எனக் கூறுகிறார் ஈ.வெ.கி.ச. இளங்கோவன். மூவரையும் தூக்கிலிடாவிட்டால் நாம் காட்டுமிராண்டிக் காலத்துக்கே சென்று விடுவோம் என்கிறார் கே.வி.தங்கபாலு. காங்கிரசார் கூறுகிறார்கள், சோ, சுப்பிரமணிய சாமி போன்ற பார்ப்பன வெறியர்கள் சொல்கிறார்கள், உச்ச நீதிமன்றமே சொல்லி விட்ட பிறகு அது பற்றிக் கருத்துச் சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லையாம். உச்ச நீதிமன்றக் கோயிலுக்கு இவர்கள் அர்ச்சகர்களாகி விட்டார்கள்.
இதுவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பேதும் மாற்றப்பட்டதே இல்லையா? 1950இல் கல்வி வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நீக்கி உச்ச நீதிமன்றம் சமூகநீதிக்கு வேட்டு வைத்தபோது, அதனைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். இதற்காக இந்திய நாடாளுமன்றம் சட்டத்தில் முதல் முறையாகத் திருத்தம் செய்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தது. எனவே இந்தியாவின் முதல் சட்டத் திருத்தமே உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதுதான் என்பதை மறந்து விட வேண்டாம்.
நீதிபதிகளும் சாதியுணர்வுக்கும் வர்க்க உணர்வுக்கும் உட்பட்டவர்களே என்பார் நீதியரசர் பி. என். பகவதி. எனவே ஒருவர் நீதிபதிப் பதவியில் உட்கார்ந்திருக்கும் காரணத்தினாலேயே புனிதராகி விட மாட்டார். அவரும் இந்த வருண, சாதி அழுக்கிலிருந்து உருவானவரே, வர்க்க பேதங்களுக்கு உட்பட்டவரே.
சென்ற அதிமுக ஆட்சி ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்களைக் கூண்டோடு பதவி நீக்கம் செய்தபோது அதனை ஆதரித்தது உச்ச நீதிமன்றம். ஆனால் 2004இல் இந்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தபோது, அதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எதிர்த்து, மருத்துவச் சேவையில் கூட ஈடுபடாது சமூநீதியைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டுமெனப் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது அவர்களைத் தட்டிக் கொடுத்தது உச்ச நீதிமன்றம்.
எனவே இந்தியக் கட்சிகளிடத்தும், நீதிமன்றங்களிடத்தும் சாதிய ஆதிக்க உணர்வு பரவிக் கிடப்பதே புற உண்மையாக இருக்க, அவர்கள் சொல்வதை அப்படியே நம்பி ஏற்பது என்பது அறிவுக்குப் பொருந்தாத ஒன்றாகும்.
ராசீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லும் காங்கிரசார் என்ன சொல்கிறார்கள்? இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த ஒரு மாபெரும் தலைவராகிய ராசீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தீர்த்துக் கட்டியது ஒரு கொடிய பயங்கரவாதச் செயல். எனவே இப்படிப்பட்ட பயங்கரவாதச் செயலைச் செய்யத் துணிந்த இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்கிறார்கள். காங்கிரசார் கூற்றுப்படி ராசீவ் காந்தி ஒரு மாபெரும் தலைவராகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் உள்ளபடியே ராசீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாதச் செயல்தானா? இது குறித்து இவர்கள் மதிக்கும் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.
ராசீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொன்றது ஏன் என்பதற்கு உச்ச நீதிமன்றமே விடையளிக்கிறது. அது சொல்கிறது, ராசீவ் காந்தி இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்தும் வைக்கும் நல்ல நோக்கில் இலங்கையோடு உடன்பாடு கண்டார். அதன் அடிப்படையில் இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அது அங்கு சென்று இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அத்துமீறிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது எனத் தெளிவாகக் கூறுகிறது. இந்த வன்முறை நடந்ததாகக் 'கருதப்படுகிறது', 'நம்பப்படுகிறது' என்பன போன்ற சொற்களை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தவில்லை என்பதைக் கவனியுங்கள். அதாவது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்திய அமைதிப் படையின் அட்டூழியம் உண்மைதான் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையிலேயே பதிவு செய்துள்ளது. ராசீவ் காந்தியின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் காங்கிரசார் இந்தத் தீர்ப்பையும் ஏற்பார்களா? சரி, மீண்டும் செய்திக்கு வருவோம். "இந்த வகையில் இந்திய அமைதிப் படையின் அட்டூழியத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டதால், அதற்குக் காரணமாக இருந்த ராசீவ் காந்தியைப் பழிவாங்குவதற்கு விடுதலைப் புலிகள் முடிவெடுத்தனர். அதன்படி அவரைக் கொலையும் செய்தனர். எனவே தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய ராசீவ் காந்தியைப் பழிக்குப் பழி வாங்குவதுதான் விடுதலைப் புலிகளின் நோக்கமே தவிர, மற்றபடி இந்திய அரசை, இந்திய மக்களை அச்சுறுத்தும் நோக்கமேதும் அவர்களுக்குக் கிடையாது, எனவே ராசீவ் காந்திக் கொலை ஒரு பயங்கரவாதச் செயல் ஆகாது" என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. இது அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளின் ஒருமித்தத் தீர்ப்பாகும்.
இந்தத் தீர்ப்பை காங்கிரசார் ஏற்பார்களா? இந்தத் தீர்ப்பை உள்ளபடியே அவர்கள் மதிப்பவர்கள் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? ராசீவ் கொலை ஒரு பயங்கரவாதச் செயலே இல்லை எனும்போது, தடா என்னும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட அந்தக் கொலை வழக்கையே முற்று முழுதாகத் துடைத்தெறிந்து விட்டு, இந்தியத் தண்டனைச் சட்டங்களின் கீழ் விசாரணையை முதலிலிருந்து நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தடா சட்டம் குற்றம் சாட்டப்பட்டோர் தங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிபதியிடம் அல்லாது காவல் துறை அதிகாரியிடம் தர வேண்டும் என்கிறது; குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை மறுக்கிறது. எனவே காங்கிரஸ் அரசு மூன்று தமிழர்களுக்கும் இந்தியத் தண்டனைச் சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படும் வாய்ப்பைத் தந்திருந்தால், அவர்களுக்குத் தங்களது ஒப்புதல் வாக்குமூலத்தைத் தங்களைக் கொடுவதைக்குள்ளாக்கிய காவல்துறை அதிகாரியிடமே தரும் கெடுவாய்ப்பு நேராமல், எவ்வித அச்சமுமின்றி நீதிபதிகளிடம் தரக் கூடிய நல்வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் சென்று தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்குறைகளின் வெப்பத்தைத் தணித்துக் கொண்ட பிறகு உச்ச நீதிமன்றம் சென்று ஒரு ஞாயமான தீர்ப்பைப் பெறும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.
உள்ளபடியே அவர்களுக்கு இந்த வாய்ப்புகளை காங்கிரஸ் வழங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் தடா சட்டத்தை விடக் கடுமை குறைவானது எனக் கருதப்பட்ட பொடா சட்டத்தையே நீக்க வேண்டுமெனச் சொல்லி வாக்கு கேட்டுத்தான் 2004இல் மத்திய ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். பொடா சட்டத்தைக் கொடுமையானது எனச் சொல்லி நாடாளுமன்றத்தைக் கூட்டி நீக்கிய காங்கிரஸ் அதனினும் கொடிய தடா சட்டத்தின் கீழ் தரப்பட்ட மூவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரிப் போராடுவது அப்பட்டமான தன் முரண்பாடாகும்.
ராசீவ் காந்தி இந்தியாவின் பெரும் தலைவர் என்பதால் அவரது கொலை வழக்கை அரிதிலும் அரிதான வழக்காகக் கருத வேண்டும் என்கின்றனர் காங்கிரசார். உச்ச நீதிமன்றத்துக்கும் ராசீவ் காந்திக் கொலை வழக்கை அரிதிலும் அரிதான வழக்கு என மெய்ப்பித்துக் காட்ட வேண்டிய தேவை இருந்தது. இதற்கு நாம் சிறு வரலாறு ஒன்றைப் பார்த்து விட்டுத் திரும்புவோம். இந்தியாவில் 1956க்கு முன்பு கொலைக்குத் தூக்கு மட்டுமே ஒரே தண்டனையாக இருந்து வந்தது. ஆனால் 1956க்குப் பிறகு கொலைக்கு மரணத் தண்டனை என்பது விதியாகவும் ஆயுள் தண்டனை என்பது விதிவிலக்காகவும் ஆனது. ஆனால் 1973இல் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட புதிய குற்றநடைமுறைச் சட்டத்தின்படி கொலைக்கு ஆயுள் தண்டனை என்பது விதியாகவும், மரணத் தண்டனை என்பது விதிவிலக்காகவும் ஆனது. பின்னர் 1980 பச்சன் சிங் வழக்குக்குப் பின்னர்தான் அரிதிலும் அரிதான கொலை வழக்குகளில் மட்டுமே  மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்னும் நிலை உருவானது. எனவேதான் ராசீவ் கொலை வழக்கும் மரணத் தண்டனை கொடுக்கும் அளவுக்கு ஓர் அரிதிலும் அரிதான வழக்கே என மெய்ப்பிக்க வேண்டிய தேவை உச்ச நீதிமன்றத்துக்கு இருந்தது. இதன் பொருட்டு நீதிபதிகள் மூவரும் எடுத்து வைக்கும் வாதுரைகளே இங்கு நம் கவனத்துக்கு உரியவை.
நீதிபதிகளின் வாதுரைகள்:
1. ராசீவ் காந்தி இந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு பெருந்தலைவர்.
2. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்த்து வைக்கும் நோக்கில் தாம் உருவாக்கிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து அதன் ஒப்புதலையும் பெற்றார்.
3. பிரபாகரனும் செயவர்த்தனாவும் புது தில்லி வந்து ராசீவ் காந்தியுடன் சேர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
4. இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்கும் பொருட்டு இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும், விடுதலைப் புலிகளின் ஒப்புதலையும் முறைப்படிப் பெற்று நல்ல நோக்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த ஒரு பெரிய தலைவராகிய ராசீவ் காந்தியைக் கொன்ற கொலை வழக்கு என்பதால் இது அரிதிலும் அரிதான வழக்காகிறது.
இந்த வாதுரைகளின் மெய்ம்மைத் தன்மையை நாம் பார்ப்போம். ராசீவ் காந்தி எப்படிப்பட்ட தலைவர் என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. 1985-89 காலக் கட்டங்களில் வாஜ்பாய், அர்கிஷன்சிங் சுர்ஜித், பரதன், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், ராம்விலாஸ் பஸ்வான், வி. பி. சிங், என். டி. ராமாராவ், முலாயம்சிங் யாதவ், லல்லுபிரசாத் யாதவ், கருணாநிதி என இந்தியாவின் அன்றைய அனைத்துக் கட்சித் தலைவர்களும் போஃபர்ஸ் பீரங்கி ஊழலை முன்வைத்து ராசீவ் காந்தியின் முகத்திரையைக் கிழித்தனர், திருவாளர் பரிசுத்தம் (மிஸ்டர் க்ளீன்) என்னும் அவரது படிமத்தை உடைத்தனர். இலங்கையில் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் போது அவரைச் சுட்டுக் கொல்லும்படி ராசீவ் காந்தி தமக்கு உத்தரவிட்டதாக அன்றைய இந்திய அமைதிப் படையின் தலைவர் அர்கிரத் சிங் இலங்கையில் தலையீடு (Intervention in Srilanka) என்ற தமது நூலில் எழுதியுள்ளார். எனவே ராசீவ் காந்தி நல்லவரா? கெட்டவரா? என்பதெல்லாம் அந்தந்த மனிதரின் அரசியல் பார்வையைப் பொறுத்தது. ஆனால் விருப்பு வெறுப்பின்றித் துலாக்கோல் போல் செயல்பட வேண்டிய நீதிபதிகள் ராசீவ் காந்தி துதி பாடும் வேலையில் இறங்குவது என்பது அவர்கள் வகிக்கும் பதவிக்கு அழகன்று. இருக்கட்டும், நமக்கு இதை விட முக்கியமானது அடுத்த இரு செய்திகளாகும்.
ராசீவ் காந்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைத்ததாக நீதிபதிகள் சொல்கிறார்கள் இல்லையா? ஆனால் அந்த ஒப்பந்ததுக்கு ராசீவ் காந்தி நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். உள்ளபடியே அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படக் கூட இல்லை என்பதே உண்மையான செய்தியாகும். அடுத்து, பிரபாகரனும், செயவர்த்தனாவும் புது தில்லி வந்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது இன்னுங்கூட வேடிக்கையான செய்தியாகும். பிரபாகரன் புது தில்லிக்கு வரவில்லை என்பது மட்டுமன்று, அவர் ஒருபோதும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இல்லை என்பதே உண்மை. இந்த ஒப்பந்தம் உண்மையிலேயே ராசீவ் காந்திக்கும் செயவர்த்தனாவுக்கும் இடையே கொழும்புவில் கையெழுத்தான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகளின் ஒப்புதலைப் பெறவே இல்லை என்பதுதான் இன்று வரை இருந்து வரும் குற்றச்சாட்டு ஆகும். இது தமிழகத்தில் ஓரளவுக்கு அரசியல் விழிப்புணர்வுள்ள எவருக்கும் தெரிந்த ஒரு சாதாரணச் செய்தியாகும். இது கூடத் தெரியாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையிலேயே இப்படிப்பட்ட செய்தியைக் குறிப்பிடுவது நகைச்சுவைதான். இன்னுங்குறிப்பாக, அவர்கள் உண்மைக்குப் புறம்பான இந்தச் செய்திகளை ராசீவ் காந்தி கொலை வழக்கு அரிதிலும் அரிதான ஒரு வழக்கு என மெய்ப்பிப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
ஆக, ராசீவ் காந்தி கொலை ஒரு பயங்கரவாதச் செயல் அன்று, அரிதிலும் அரிதான கொலையும் அன்று என உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே தெளிவாகத் தெரிந்து விட்ட பிறகு, இந்தத் தீர்ப்பை வேத வாக்காகக் கொண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதும், நளினியை வாழ்நாளெல்லாம் சிறையிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும் என்பதும் அடாத செயலாகும், ஈவிரக்கமற்ற அநீதியாகும்.
காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லி கர்நாடகக் காங்கிரசுக்கு ஆணையிட வக்கில்லாத தில்லி காங்கிரஸ் தலைமை, பெரியாற்று அணைச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கச் சொல்லி கேரளக் காங்கிரஸ் தலைமைக்குக் கட்டளையிடத் துப்பற்ற தில்லி காங்கிரஸ் தலைமை இப்போது உப்புச் சப்பில்லாத ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வைத்துக் கொண்டு மூன்று தமிழர் உயிரைக் குடிக்கத் துடிப்பதுதான் உண்மையிலேயே சட்டத்துக்குப் புறம்பான காட்டுமிராண்டிச் செயலாகும்.
இப்போது காங்கிரசார் ராசீவ் கொலையின் போது கூடவே இறந்து போனவர்களின் குடும்பத்தினரைக் கூட்டிக் கொண்டு வந்து ஒப்பாரி வைக்கிறார்கள். நாம் அவர்கள் குடும்பத்தினருக்குக் கூறிக் கொள்கிறோம், அன்புத் தமிழர்களே, உங்கள் குடும்பத் துயரத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். ஆனால் அதற்காக இந்த மூவரின் சாவில்தான் உங்கள் துயரம் தணியும் என்பதில் எந்த ஞாயமும் இல்லை. ஏனென்றால் தனு உட்பட இந்தக் கொலைச் சதியில் நேரடியாக ஈடுபட்ட 12 பேரும் கொலை செய்யப்பட்டு விட்டனர், அல்லது தற்கொலை செய்து கொண்டு விட்டனர். நேரடிக் கொலையாளிகள் எவரும் கிடைக்காத நிலையில்தான் கையில் கிடைத்த 26 பேரையும் தூக்கிலிடுவோமெனப் பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அவர்களில் நால்வரை உச்ச நீதிமன்றம் தூக்கிலிடச் சொன்னது. எனவே நேரடிக் கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில் கிடைத்தவரையாவது தூக்கிலிட முயலும் ஒரு கொடூரப் பேரமே இந்த நீதிமன்றப் படிக்கட்டுகளில் அரங்கேறி முடிந்துள்ளது என்பதை ராசீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் தயவுகூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்திக் கொலை வழக்கு அனைவருக்கும் இன்னும் தெளிவான புரிதலைத் தரும். காந்தியாரைச் சுட்ட நாதுராம் கோட்சே தூக்கில் தொங்கிய கதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தச் சதித் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட கோபால் கோட்சேக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்த கோபால் கோட்சே பின்னர் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் அந்தக் கொலைக்கு வருந்தவில்லை எனக் கூறினார். இந்தியாவின் தந்தை எனப்படும் காந்தியடிகளின் கொலைக்கே ஒருவருக்கு மட்டுந்தான் தூக்கு வழங்கப்பட்டது. எனவே ராசீவ் ஒரு பெரிய தலைவர் என்பதற்காகக் குற்றத்தில் நேரடியாகத் தொடர்பில்லாதவர்களும் தூக்கில் தொங்க வேண்டும் எனக் கோருவது எவ்வளவு முரணானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது காந்தியடிகளை விட ராசீவ் காந்தி இன்னும் உயர்ந்த தலைவர் எனக் கருதுகிறதா காங்கிரஸ்?
இஃதன்னியில், கொலைக் குற்றங்களுக்கு மரணத் தண்டனைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த ஒரு காலக் கட்டத்தில் காந்தியடிகள் போன்ற ஒரு பெருந்தலைவரின் கொலை வழக்கில் ஒரே ஒரு மரணத் தண்டனைதான் வழங்கப்பட்டது. ஆனால் அரிதிலும் அரிதான கொலைக் குற்றங்களுக்கு மட்டுமே மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து நிலவுகிற இன்றைய காலக் சூழலில் ராசீவ் காந்தி போன்ற ஒரு பெருந்தலைவரின் (?) கொலைக்கு மூன்று மரணத் தண்டனைகள் வழங்கப்படுமானால் அது எந்தளவுக்குப் பெரிய வரலாற்று முரண் என்பதையும் ஒவ்வொரு மனித நேயரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்குத் தண்டனைக்குக் கருணை மனு கேட்பதே கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத செயல் போன்றும், சட்ட திட்டங்களுக்குப் புறம்பான குறுக்கு வழி போன்றும் ஒரு தோற்றத்தை காங்கிரசார் உருவாக்கி வருகின்றனர். இதே போன்ற கருத்துகளைக் கூறி சுப்ரமணியசாமி, வழக்குரைஞர் விஜயன் போன்றோர் பிதற்றி வருகின்றனர். நமது நீதிமன்றங்கள் எந்தச் சார்புமற்ற நடுநிலைத் தீர்ப்புகளை எல்லா நேரங்களிலும் வழங்கி விடுவதில்லை என நாம் தெளிவாகக் கண்டோம். இந்தியா போன்ற வருண சாதிப் பின்னணி கொண்ட, ஊழல்கள் மலிந்து போன ஒரு நாட்டில் எந்த ஒரு குற்றத்தையும் அய்யந்திரிபற மெய்ப்பிக்கவியலாது என்கிறார் பேராசிரியர் கிலானி. இந்தக் காரணங்களினால்தான் மக்கள் மன்றங்களுக்கு, அதாவது 161 உறுப்பின்படி சட்டமன்றத்துக்கும், 72 உறுப்பின்படி நாடாளுமன்றத்துக்கும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்டமே வழங்கியுள்ளது. இந்தச் சட்ட வழிமுறைகளின்படிதான் தமிழர் மூவரும் தூக்குத் தண்டனைக் குறைப்பு கேட்டுத் தமிழக ஆளுனரிடமும், இந்தியக் குடியரசுத் தலைவரிடமும் விண்ணப்பித்துள்ளனர். எனவே இது மிக நேர்மையான, ஞாயமான, சனநாயக வழியாகும்; எவ்வகையிலும் குறுக்கு வழியன்று.
நாம் ஏற்கெனவே கண்டவாறு உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகிய நால்வரும் 1999இல் மரணத் தண்டனை பெற்றனர். இவர்களும் அதே ஆண்டு அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் தண்டனைக் குறைப்பு கேட்டு விண்ணப்பித்தனர். இதன்படி அன்றைய கலைஞர் தலைமையிலான அமைச்சரவை நளினிக்கு மட்டும் தண்டனைக் குறைப்பு அளித்து விட்டு மற்ற மூவர் விண்ணப்பங்களையும் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து அந்த மூவரும் குடியரசுத் தலைவரிடம் தண்டனைக் குறைப்புக் கேட்டு விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பத்தைத்தான் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைப்படி 2011 ஆகத்து 29 அன்று நிராகரித்தார். இடையில் 12 ஆண்டுகள் கழிந்து விட்டன. எந்தக் காரணமுமற்ற இந்தக் காலத்தாழ்வால் மூவரும் ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்கள் கைதாகிய தேதியிலிருந்து கணக்கிட்டால் 20 ஆண்டுகளாக இந்தத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்தக் கால இடைவேளையில் இவர்கள் ஒரு நாள் கூட வெளியுலகைக் காணவில்லை.
தூக்குக் கயிறு இன்று வருமா, நாளை வருமா எனச் சாவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி வாடி வதங்கி விட்டனர். ஆங்கிலத்தில் vegetable state என்பார்களே, அப்படியொரு காய்கறி நிலையை இவர்கள் அடைந்து விட்டனர். காய்கறியாய் வாடிப் போன இந்த மூன்று உயிர்களையும் அறுக்க நினைப்பது மரணத் தண்டனையை விட இன்னும் கொடுமையானது. சொல்லப்போனால், இப்படி ஒரு காலத் தாழ்வைச் செய்து இவர்களை வாட்டி வதைத்ததற்கு தில்லி மத்திய அரசுதான் இந்த மூவரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாறாக, எல்லா மனித அறங்களையும் காலில் போட்டு மிதித்து இந்தப் படுபாதகச் செயலைச் செய்வதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு துணிந்துள்ளது.
தில்லியின் இந்தக் கொடுநோக்கு கண்டு பெரும் எழுச்சி கொண்ட நாம் தமிழகச் சட்டமன்றம் மூவர் தூக்குக்கு எதிராகத் தீர்மானம் இயற்றிய பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் மூவரின் தூக்குக்கு இரு மாதத் தடை விதித்த பிறகு அடங்கிப் போய் விட்டோம் என்பதே உண்மை. ஏற்கெனவே வாடி வதங்கிப் போய் விட்ட அந்த இளைஞர்கள் இரு மாதமில்லை, இனி ஒரு வினாடி கூட சிறைக் கொட்டடியில் இருக்கக் கூடாது. இப்போதே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே நமது உடனடிக் கோரிக்கையாக இருக்க வேண்டும். சரியாகச் சொன்னால், ராசீவ் கொலை வழக்கில் இருபதாண்டுக்கு மேலாகச் சிறைத் துயரத்தை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய எழுவருக்கும் உடனடி விடுதலை வேண்டும் என்னும் முழக்கமே இனித் தமிழக வீதிகளில் ஒலிக்க வேண்டும்

Tuesday, September 20, 2011

நாம் செய்யும் ஒரு தவறு நம்முடைய எத்தனை சந்ததிகளை அழிக்க வல்லது என்பதை நாம் பரிந்துகொள்ளவேண்டும்

http://www.tamilpaper.net/?p=4115

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் விவசாயத்துக்குள் நுழைந்து நாகரிகங்களாக உருமாற ஆரம்பித்தது. அதன் பின் எத்தனையோ நாகரிகங்களும் பேரரசுகளும் உருவாகி மடிந்துபோயிருக்கின்றன. கோடி தலைமுறைகள் வந்துபோயிருக்கின்றன. ஒருவேளை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருகதிரியக்க விபத்து நடந்திருந்தால் அதன் தாக்கத்தை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருப்போம். காரணம், கதிரியக்கப் பொருட்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வீரியத்துடன் இருக்கும் தன்மையுடையவை.  இந்நிலையில், இன்று நாம் செய்யும் ஒரு தவறு நம்முடைய எத்தனை சந்ததிகளை அழிக்க வல்லது என்பதை நாம் பரிந்துகொள்ளவேண்டும்.
அணு உலைகளின் நீடித்த ஆபத்துகளும் சரி, விபத்துகளினால் ஏற்படும் பெரும் அழிவுகளும் சரி, மிகக் குறைவானதாகவே அணுசக்தி ஆதரவாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. இதற்குப் பின்னணியில் அணுசக்தி மேலண்மை செய்யும் தனியார் நிறுவனங்களின் பெரும்பணம் செயல்படுவதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் ‘லாபி’ அமைப்புகள் உலக நாடுகளெங்கிலும் செயல்பட்டு தங்களுக்கு சாதகமான கொள்கைகளை உருவாக்கிக்கொள்கின்றன. மிகக் குறிப்பாக வளரும் நாடுகளை இவை குறிவைக்கின்றன. தனியாருடன் அணுஒப்பந்தங்களில் ஈடுபடுவதில்லை என்று சொல்லிவந்த இந்தியாவும் சமீப காலமாக மாறிவிட்டது.
மாறியபிறகு, அணு விபத்துகளின்போது மக்களுக்கு யார் உதவித்தொகை வழங்குவது என்பது குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இதுவும் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கைகழுவிவிட்டு ஓடும் வசதியை கொண்டிருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்புக்குப் பிறகு இது கொஞ்சம் சரி செய்யப்பட்டுள்ளது. (தற்போதுகூடங்குளம் திட்டம் இந்தச் சட்டத்துக்குள் அடங்காது என்று அரசு கைவிரித்துள்ளது).
தனியார்மயமாதல் தன்னளவில் ஒரு கெட்ட பொருளாதாரக் கொள்கையல்ல. இன்று உலகளவில் வெற்றிகரமான ஒரே பொருளாதார வகைமையாக அதுவே உள்ளது. ஆனால் தனியார்மயமாதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு நன்மைபயக்கும்படி செய்வதே அரசின் முக்கியக் கடமை. அதைச் செய்யத் தவறும்போது இலாபம் மட்டுமே குறிக்கோளான தனியார் நிறுவனங்கள் கடற்கொள்ளைக்காரர்களைப்போல சூறையாடத் துவங்கிவிடுகின்றனர். இந்தியாவில் அப்படி ஒரு கட்டுப்பாடான அரசு இயந்திரம் இருக்கிறதா என்பது பெரும் கேள்வி. இதில் இன்னொரு உண்மையையும் நாம் பார்க்க வேண்டும். இதுவரை அணுசக்தித் துறையில் இலாபம் பார்த்து வந்த சீமன்ஸ் எனும் தனியார் நிறுவனம் இனிமேல் அந்தத் துறையில் தான் செயல்படப் போவதில்லை என அறிவித்துள்ளது. இலாபத்தை விட மனித இனத்தின் மீது அது காட்டியிருக்கும் அக்கறை பாராட்டத் தகுந்தது. ஆனால் நம் அரசோ பழைய அணுசக்தி தயாரிப்பு முறைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறது.
நம் தேவையில் வெறும் 2.7% மின்சாரத்தைத் தயாரிக்கும் அணு உலைகளினால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். இவற்றுக்குப் பதிலாக மாற்று மின்சக்தி உற்பத்தியை இந்தியா ஊக்குவிக்கவேண்டும். நமது மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய பலஆலோசனைகளை பன்னாட்டு சக்தி நிறுவனம் (International Energy Agency) வழங்கியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50%க்கும்மேல் வீணாக்கிவிடுகிறது என்கின்றன ஆய்வுகள். இதில் தேவயற்ற மானியங்களும், ஊழல்வழி இலவச மின்சாரம் பெறுவதும் உள்ளது. ஆக நாம் நமது மின்சார விநியோகத் திறனை மேம்படுத்துவது முதலில் அவசியம். ஆனால் அது குறித்து இங்கே யாரும் திட்டமிடுவதாகத் தெரியவில்லை.ஒரே ப்ராஜெக்டில் அதிக இலாபம் பார்க்கலாம் என்கிற அரசியல்தானே இது? IEA முன்வைக்கும் ஆலோசனைகளில் மிக முக்கியமானது ஒவ்வொருபகுதிக்குமான மின்சாரத் தேவைகளை அந்தந்த பகுதிகளிலேயே உற்பத்தி செய்ய முயலவேண்டுமென்பதே. தற்போதைய மாற்று மின் உற்பத்திமுறைகளைக் கொண்டு இதை நிச்சயம் சாத்தியமாக்கலாம்.
இந்தியா தன் மின்சக்தித் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஐ.இ.ஏ முன்வைக்கும் சில முக்கியப் பரிந்துரைகளைப் பார்ப்போம்.
  • மின்சக்தி தயாரிப்பை பயன்பாட்டிடத்துக்கு அருகில் கொண்டு செல்வது. இதன்மூலம் சிறியதாக பல திட்டங்களைச்செய்து அந்தந்த பகுதிகளின் வேலைவாய்ப்பையும் பெருக்க முடியும்.
  • மின்சக்தி மானியங்கள் அதற்குத் தகுதியான மக்களுக்கு மட்டும் வழங்கப்படவேண்டும்.
  • மின் வினியோகம் முறைப்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் பெரும் இழப்பைத் தவிர்க்க வேண்டும்.
  • மின்சக்தி திருடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.
  • சூரிய சக்திமூலம் வீட்டுத் தேவைகளுக்கு மின்சக்தி தயாரிப்பு பரவலாக்கப்படவேண்டும்.
காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிப்பில் இந்தியா முதலிடத்திலுள்ளது. ஆண்டு முழுவதும் சூரிய ஒளி விழும் பகுதிகள் இந்தியாவில் ஏராளமாயக உள்ளன. எந்தத் தீங்கும் விளைவிக்காத இவற்றைக் கொண்டு மின்சக்தியை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு தலைமுறைகள் தாண்டி பேராபத்துக்களை உருவாக்கும் அணு ஆலைகளை அமைக்க நம் அரசுகள் முடிவெடுப்பதன் பின்னணியில் ஒரே ஒரு மனநிலைதான்தென்படுகிறது. அது மக்களின் உயிரையோ, வாழ்க்கை தரத்தையோ கிஞ்சித்தும் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை.
கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு எதிராக டாக்டர் உதயகுமார் முன்வைத்திருக்கும் 13 முக்கிய கருத்துக்கள் இவை
  1. கூடங்குளம் அணு உலைகள் அமைக்க ஜனநாயக முறைகள் கையாளப்படவில்லை. அணு உலையினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களோ, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த திட்டங்களோ தீட்டப்படவில்லை அல்லது அவை மக்கள் பார்வைக்குத் தரப்படவில்லை.
  2. தமிழக அரசு உலைக்கும் 2முதல் 5 கி,மீ வரை உள்ள இடங்கள் மக்கள் வாழத் தகுதியற்றவையாக வரையறுத்துள்ளது.( G.O. 828, 29.4.1991 – Public Works Department).  ஆனால் கூடங்குளம் அதிகாரிகள் மக்களிடம் வாய்மொழியாக அப்படி எதுவும் இல்லை என்று தன்னிச்சையாக பதிலளிக்கிறார்கள். இது அணு உலை ஆரம்பித்த பின்னர் தங்கள் வாழ்விடங்களிடமிருந்து மக்களை அப்புறப்படுத்தும் என்னும் பயத்தை அதிகப்படுத்துகிறது.
  3. உலைக்கு 30 கி.மீ சுற்றளவில் பத்து இலட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். விபத்து நேர்கையில் இந்தப் பெரிய மக்கள்திரளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்தியமற்றது.
  4. அணு உலைகளை குளிரூட்ட பயன்படுத்தப்படும் தண்ணீர் கடலுக்குள் செலுத்தப்படவுள்ளது. அது கடல் நீரிலும், மீன்களிலும் கதிரியக்கத்தைசெலுத்தும். மீனவர்கள் மேலும் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள். கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும் (கன்னியாகுமரி, முட்டம் போன்ற அழகிய கடற்கரை சுற்றுலாத் தலங்கள் நேரடியாக பாதிக்கப்படும். குளச்சல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அதே கடல்வழியேயே அடையக்கூடியவை).
  5. ஏற்கெனவே தோரியம் பிரித்தெடுக்கும் (மணவாளக்குறிச்சி மணல் கம்பெனி) பணியில் இருந்தவர்களில் பலரும் புற்று நோயால்அவதிப்படுகின்றனர். இன்னொரு சோகம் இங்கே வேண்டாம்.
  6.  கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானங்களின் தரங்கள் அங்கே வேலைபார்த்தவர்களாலேயே தரமற்றவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. (இவை வட இந்திய ஒப்பந்ததாரர்களால் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்).
  7. அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் காட்டிலாகா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூடங்குளத்தில் 3-6 அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளார்.ஆக 1-2ம் சூழலுக்கு பாதுகாப்பானதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
  8. பலரும் இந்தப் பகுதியில் எந்த இயற்கை சீற்றமும் வராது என தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு அது எப்படி நிச்சயமாகத் தெரியும்? 2004ல் இதேஅணு உலையின் கட்டுமானங்கள் சுனாமியால் இடிக்கப்பட்டன. மார்ச்19, 2006ல் இங்கே நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12, 2011ல் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (ஃபுக்குஷிமாவில் இயற்கை சீர்றம் குறித்த இத்தகைய மேம்போக்கான நம்பிக்கைகள் திட்டத் தோல்விகளை உருவாக்கியுள்ளதை சைன்ஸ் பத்திரிகை பதிவு செய்கிறது. உண்மையில் உலகின் எந்த பகுதியில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் குறிக்கும் எந்த அறிவியலும் உருவாக்கப்படவில்லை).
  9. இந்தியப் பிரதமரே நம் நாட்டின் அனுசக்தி ஆலைகள் தீவிரவாதிகளின் டார்கெட்டாக உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
  10. ரஷ்ய நிறுவனத்துடன் விபத்து உதவித்தொகை வழங்குவது குறித்த ஒப்பந்தங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ரஷ்யா தனக்கும் இந்தியஅரசுக்கும் 2008ல் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கை தற்போதைய NPCIL சட்டத்தை மிஞ்சியதாக வாதாடிக்கொண்டிருக்கிறது.
  11. கூடங்குளம் அணு ஆலையின் கட்டுமானச் செலவு குறித்து பல்வேறு முரணான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அவை இந்த திட்டம் யாருடைய இலாபத்துக்கு செய்யப்படுகின்றன எனும் கேள்வியை எழுப்புகின்றன.
  12. ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு உலக அளவில் அணுசக்தி குறித்த மாற்று அணுகுமுறைகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவோ ரஷ்யாவோ கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் எந்த புதிய அணு ஆலையையும் உருவாக்கவில்லை. இந்தியாவிலேயே மேற்கு வங்கமும், கேரள மாநிலமும் அணுசக்திக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளன.
  13. இந்திய அரசு அணு சக்தி மீது மதிகெட்ட ஈடுபாடுகொண்டுள்ளது. அதன் அணுத் திட்டங்களும் செயல்பாடுகளும் அதீத இரகசியத்தன்மையுள்ளவை. மக்களின் குற்றச்சாட்டுகளை கேட்கவே மறுக்கிறது அரசு. இதெல்லாம் உண்மையில் இந்திய மக்களின் இலாபத்துக்காகவாஅல்லது அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு நாட்டு கம்பெனிகளின் இலாபங்களுக்கா? நம் நாட்டின் (இன்றைய) நாளைய மக்களின் உயிரைவிடவும் இலாபம் மேலானதா?
இன்னும் சில முக்கியமான காரணங்களும் உள்ளன. கூடங்குளத்தில் பயன்படுத்தப்படவிருப்பது உலகில் முதன்முதலாக உருவாக்கப்பட்டஅணுமின் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஒன்றில் உருவான கலன்கள். 1969 வாக்கில் இந்தத் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாற்பது வருடங்கள் தாண்டிய தொழில்நுட்பத்தை ஏன் நம் அரசு இத்தனை செலவில் இந்தியாவில் நிர்மாணிக்கிறது? அதுவும் ரஷ்யாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பழசாகிப்போன உபகரணங்களை? அதீத வெப்பம் கொண்டியங்கும் கொதிகலன்களைக் குளிரூட்டவும் மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் நீருக்காகவும் தாமிரபரணி பேச்சிப்பாறை அணை ஆகிய விவசாய நீராதாரங்களிலிருந்து தண்ணீர் ஆலைக்குத் திருப்பிவிடப்படுகிறது. நீர்வளம் குறைந்துபோகும் நிலை வந்தால் விவசாயத்துக்கல்ல, அணு ஆலைக்கே முதன்மை அளிக்கப்படும். வீட்டில் விளக்கெரியும் ஆனால் அடுப்பெரியாது!
அணுசக்தி நம் நாட்டின் முதன்மையான தேர்வாக இருக்கக் கூடாது. மாற்று மின்சக்தி தொழில்நுட்பங்கள் மிக விரைவாக உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில் இது ஒரு முட்டாள்தனமான தேர்வு. அணுசக்தி உற்பத்தி மக்கள் நெருக்கமே இல்லாத இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். அதுவும் இயன்றவரை தவிர்க்கப்படவேண்டும். ஃபுக்குஷிமாவுக்குப் பின் நாம் நமது அணுசக்தி திட்டங்களை சீர்தூக்கி சரி செய்ய வேண்டும். நம்அணுசக்தி ஆலைகளின் பாதுகாப்பு தர நிலைகளை உலகளாவிய தன்னார்வ நிறுவனங்களைக் கொன்டு மதிப்பிட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டும். ஒரு வெளிப்படையான அணு சக்தி அணுகுமுறை நமக்கு உடனடியாகத் தேவை.
கூடங்குளத்தை பொறுத்தவரை அங்கே அணு உலை அமைப்பது மாற்றியமைக்கப்பட்டு அதை மாற்று மின் உற்பத்தி நிலையமாகவோ கடலலையிலிருந்து மின்சாரம் உருவாக்கும் திட்டமாகவோ மாற்றப்படவேண்டும். அல்லது வேறு மாற்றுத் திட்டங்களுக்காக அதை பயன்படுத்தவேண்டும். சென்னை தலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாறப்போவதில்லையா? அதுபோல்.
கூடங்குளத்தில் நடப்பது வெறும் கடற்கரையோரத்து மீனவர்களுக்கு ஆதரவான போராட்டமல்ல. அது இந்திய அளவில் அணுசக்தி அமைப்புகளின் மெத்தனத்தையும் இரகசியத் தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் எதிர்த்து நடத்தப்படும் போராட்டமே. இதற்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பது மிக மிக அவசியமாகும்.

Friday, September 16, 2011

சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்





கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
 
kudankulam_323தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
 i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
 
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
 
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
 
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.
 
அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
 
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
 
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
 
1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
 
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.
கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா? 
ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா? 
சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்